கடந்த வாரம் மிக பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் காலா, இந்த திரைப்படத்தை ரஞ்சித் இயக்க ரஜினி நடித்திருப்பார் மேலும் சமூதிரகனியும் நடித்திருப்பார் படத்திற்கு சில இடங்களில் நல்ல வரவேற்ப்பு கிடைத்திருந்தாலும் எதிர்பார்த்த இடத்தில் பெரிய வசூல் இல்லை என்பதே உண்மை நிலவரம்.

KAALA

அதிலும் சில இடத்தை ரஜினியின் கோட்டை என்றே சொல்வார்கள் அந்த இடத்தில் வசூல் ஆகவில்லை என்பது தான் மிகவும் வருத்தமான செய்தியாக இருக்கிறது ஆம் ரஜினியின் கோட்டை என அழைக்கப்படும் மலேசியாவில் காலா படத்திற்கு வசூலில் பெரும் அடி விழுந்துள்ளது.

காலா திரைப்படம் வெளியாகி 4 வது நாள் வசூல் விவரம் தெரியவந்தது அதில் மலேசியாவில் காலா திரைப்படம் நான்கு நாள் முடிவில் காலா திரைப்படம் 1.71 கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளதாக கூறபடுகிறது, ஆனால் இதற்க்கு முன் வெளியாகிய கபாலி திரைப்படம் ஓப்பனிங்கிலேயே 10 கோடி வசூல் ஆனது அனைவருக்கும் தெரியும் அனால் காலா படம் வசூலில் இப்படி ஒரு நிலைமை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மலேசியாவில் முஸ்லிம் அதிக அளவில் இருப்பதால் ரம்ஜான் மாதம் என்பதால் கூட்டம் சொல்லிகொள்ளும் அளவிற்கு வரவில்லை என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.