ரஞ்சித் இயக்கி ரஜினி நடிக்கும் படம் காலா இப்படத்தை தனுஷ், தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.இந்த படத்தின் படபிடிப்பு மும்பை ,சென்னை ,என பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ரஜினியுடன், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டீல், சுகன்யா, ஈஸ்வரிராவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

kaala

காலா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இதன் இரண்டாவது போஸ்டரை நடிகர் தனுஷ் நள்ளிரவு வெளியிட இருப்பதாக  அறிவித்திருந்தார்.

அதே போல்  காலா படத்தின் இரண்டாவது போஸ்டரை நேற்று இரவு  நடிகர் தனுஷ் சரியாக 12 மணிக்கு டுவிட்டரில் வெளியிட்டார். ரஜினியின் பிறந்தநாளையொட்டி இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் பெரும் குஷியில் உள்ளார்கள்.