Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யா ஜோதிகா நடித்த மெஹா ஹிட் படத்தில் மீண்டும் இணைகிறார்களா.?
kaakha kaakha 2 : காக்க காக்க பார்ட் 2- மீண்டும் இணைகிறார்களா சூர்யா ஜோதிகா.?
தமிழ் சினிமாவில் பல ஜோடிகள் இருக்கிறார்கள், அஜித் – ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பிரசன்னா- சினேகா, பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன், இவர்களில் அஜித் ஷாலினிக்கு பிறகு மிகவும் பிரபலமான ஜோடி என்றால் சூர்யா ஜோதிகா தான் இவர்களின் ஜோடி அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் அதேபோல் இவர்களின் திருமணத்தை பல ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

kaakha-kaakha-2
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் ஹிட் வரிசையில் இருக்கிறது, தற்போது இவர்கள் இருவரும் தனித்தனியாக பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார், இந்த நிலையில் இந்த ஜோடி எப்பொழுது இணையம் என பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி இருக்க தற்போது ஒரு தகவல் இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது அது வேறு ஒன்றுமில்லை காக்க காக்க திரைப்படத்தின் இரண்டாம் பாகம்தான், காக்க காக்க படத்தில் சூர்யா ஜோதிகா நடித்தது அனைவருக்கும் தெரியும்.
அதேபோல் காக்க காக்க இரண்டாம் பாகத்தில் சூர்யாவுடன் இணைந்து ஜோதிகா நடிக்கிறார் என்றும் முதல் படத்தை தயாரித்த தாணு தயாரிக்கிறார் என்றும், படத்தை கௌதம் மேனன் இயக்கி இருக்கிறார் என்ற தகவல் தான் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது ஆனால் தயாரிப்பு தரப்பிலிருந்து எந்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகாததால் இது வதந்தி என பலர் கூறிவருகிறார்கள். ஆனால் படம் எடுத்தல் அனைத்து ரசிகர்களுக்கும் ஹாப்பி தான்.
