Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் காஜல் இத்தனை படங்கள் நடித்துள்ளாரா.? லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது!
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் காஜல் பசுபதி. இந்த படத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதன் பிறகு டிஷ்யும் படத்தில் சந்தியாவுக்கு தோழியாகவும், சூர்யா நடித்த சிங்கம் மற்றும் இரும்புத்திரை படத்தில் காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளார். பின்பு வரிசையாக பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடன இயக்குனரான சாண்டி மாஸ்டர் உடன் திருமணத்தில் கைகோர்த்தார். ஆனால் இவர்கள் இருவருக்கும் சில முரண்பாடுகள் ஏற்பட்டதால் பின்பு இருவர் சம்மதத்துடன் விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது சாண்டி மாஸ்டர் மற்றொரு திருமணம் செய்து கொண்டார்.
காஜல் பசுபதி நடித்ததாக ரசிகர்கள் நினைத்த படங்கள் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், சுப்பிரமணியபுரம் மற்றும் கோ. ஆனால் காஜல் பசுபதி 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதோ அவர் நடித்த படங்களின் பட்டியல் கீழே.
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், கனவுகள், இதய திருடன், டிஷ்யும், கல்வனின் கதாலி, சுப்பிரமணியபுரம், பெருமாள், சிங்கம், கோ, வேலூர் மாவட்டம், மௌனகுரு, கௌரவம், மாயை, எண்ணமோ நடக்குது, அதிதி, இரும்பு குதிரை, கதம் கதம், அழகு குட்டி செல்லம், பழைய வண்ணாரப்பேட்டை, யானும் தீயவன், ஆயிரதில் இருவர்

sandy-kaajal
கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் கலகலப்பு 2 என்பது குறிப்பிடத்தக்கது.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
