Connect with us
Cinemapettai

Cinemapettai

kaduvetti-guru-suresh

Tamil Cinema News | சினிமா செய்திகள்

R K சுரேஷ் மிரட்டும் தோற்றத்தில் வெளியான காடுவெட்டி ஃபர்ஸ்ட் லுக்.. தரமான சம்பவம் காத்துகிட்டு இருக்கு!

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் டோலிவுட், மோலிவுட், பாலிவுட் என அனைத்து திரையுலகுகளிலும் அரசியலில் ஈடுபட்ட தலைவர்களின் வாழ்க்கையை கதையாக வைத்து படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்தப் படங்கள் அனைத்து தரப்பு மக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

அந்த வகையில் தான் தற்போது மறைந்த வன்னியர் சங்க தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு வாழ்க்கை தமிழில் திரைப்படமாக தயாராகி வருகிறது.

மேலும் சோலை ஆறுமுகம் இயக்கவுள்ள இந்த படத்தில், ஆர்கே சுரேஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம்.

இந்த நிலையில் காடுவெட்டி படத்தின் மிரள விடும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ஆர் கே சுரேஷ். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி பெருமளவு பேசப்பட்டு வருகிறது.

அதாவது பெரிய பொருட்செலவில் படமாக்கப்படும் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு அரியலூர், பெரம்பலூர், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட உள்ளதாம்.

இந்த படத்திற்கு முதலில் ‘மாவீரன் ஜெ குரு’ என பெயரிடப்பட்டதாம். ஆனால் தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ‘காடுவெட்டி’ என்று டைட்டில் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் இந்த போஸ்டரில் மிரள விடும் தோற்றத்தில் கையில் அரிவாளுடன் ஆர்கே சுரேஷ் அமர்ந்திருப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

kaduvetti-rk-suresh

kaduvetti-rk-suresh

எனவே, தயாரிப்பாளராக அறிமுகமாகி, வில்லனாக உருவெடுத்து, தற்போது ஹீரோவாக அவதரித்துள்ள ஆர்கே சுரேஷின் ஹீரோ அவதாரத்தைக் காண  பலர் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
To Top