fbpx
Connect with us

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய தியேட்டரில் கபாலி படைத்த சாதனை – ஆச்சர்யத்தில் உலக சினிமா

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய தியேட்டரில் கபாலி படைத்த சாதனை – ஆச்சர்யத்தில் உலக சினிமா

ரஜினி நடித்துள்ள கபாலி படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த படத்திற்கான பப்ளிசிட்டியை விமானத்திலும் வெளியிட்டு வியக்க வைத்தார் தயாரிப்பாளர் தாணு.

அதோடு இதுவரை தமிழ் சினிமா வெளியிடப்படாத பல வெளிநாடுகளிலும் இந்த கபாலி திரையிடப்படுவது இன்னும் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வரு கிறது.

அந்த வகையில், இதுவரை எந்த தமிழ் சினிமாவும் வெளியிடப்படாத ஐரோப்பாவின் ரெக்ஸ் சினிமா தியேட்டரில் முதன்முறையாக கபாலி வெளியாக இருக்கும் செய்திகள் ஏற்கனவே வெளியாகின.ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய தியேட்டர் இதுதான்.

ஆனால், இப்போது அந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்த்து விட்டதாக பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கிறது. பெரும்பாலும் ஹாலிவுட் படங்களே அதிகமாக வெளியாகும் இந்த தியேட்டரில், அந்த படங்கள் வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே முதல் காட்சி டிக்கெட்டுகள் விற்பனையானதில்லையாம்.

அந்த வகையில், கபாலி படம்தான் முதல் காட்சிக்கான 2800 டிக்கெட்களும் விற்பனையாகி உள்ளதாம். அந்த வகையில், ரெக்ஸ் சினிமா தியேட்டரில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் படமே மிகப்பெரிய சாதனை செய்திருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top