Tamil Cinema News | சினிமா செய்திகள்
மணிரத்தினத்தின் இந்த படம் தான் க/பெ ரணசிங்கம் – கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
KJR ஸ்டுடியோஸ் தயரிப்பில், விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான க/பெ ரணசிங்கம் படம் அக்டோபர் இரண்டாம் தேதி OTT தளத்தில் (pay per view 199 ரூபாய்) வெளியாக நல்ல ஹிட் அடித்தது.
எமோஷனலாக எடுக்கப்பட்ட இப்படம் பலரது பாராட்டையும் பெற்றது. இதன் வரவேற்பை பார்த்துவிட்டு ஹிந்தி, மலையாலம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் டப் செய்தும் வெளியிட்டனர். அதுமட்டுமன்றி தியேட்டர்கள் திறந்ததும் வெளியாகும் படமும் இது தான்.
கதை – ராமநாதபுரம் மாவட்டத்தில் விஜய் சேதுபதிக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் எதார்த்தமாக காதல் உருவாகி திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகு வெளிநாடு சென்று வேலை செய்து குடும்பத்தை உயர்த்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார் விஜய் சேதுபதி.
அங்கு கம்பெனியில் விபத்தா, அல்லது போராட்டத்தில் ஈடுபட்டு இறந்தாரா ரணசிங்கம் என்பது தெரியவில்லை. அவர் உடலை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் இறங்குகிறார் அரியநாச்சி. ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் அவர் படும் அவலங்கள், MLA , மந்திரி, பிரதமரை சந்திப்பது என செல்கிறது கதை. இறுதியில் கணவர் உடல் வந்திவிட்டது என நினைக்கும் சூழலில் நேர்ந்த கொடுமை தான் அனைவரையும் கண் கலங்க வைத்துவிட்டது.
வேறு படத்தில் இருந்து காப்பி அடிப்பது என்பது ஒரு ரகம், இன்ஸ்பயர் ஆகி படம் எடுப்பது அடுத்த ரகம். தெரிந்தோ தெரியமாலோ இயக்குனர் விருமாண்டி மணிரத்தினத்தின் படத்தின் உந்துதலில் தான் இப்படத்தை எடுத்துள்ளார். அதே போன்ற திரைக்கதை, இன்றைய நிகழ்வுகளை புகுத்தியுள்ளார்.
ரோஜா – 1992 இல் வெளியான படம். அக்காவ பெண் பார்க்க வந்து திருநெல்வேலி மாவட்டத்தில் தங்கையை மனம் முடிக்கிறார் ரிஷி. இவர் RAW ஏஜென்சியில் பணி புரிபவர். மிலிட்டரி விஷயமாக ஜம்மு காஷ்மீர் செல்கிறார் அரவிந்த் சாமி தன் மனைவி மதுபாலாவுடன்.

roja-manirathinam-cinemapettai
அங்கு தீவரவாதிகள் இவரை கடத்த, தன் கணவரை மீட்க சொல்லி மிலிட்டரி போஸ்ட், ஆஃபீஸர்ஸ், அதிகாரிகள் என அலைகிறார் ஹிந்தி தெரியாமல். மினிஸ்டர் உதவி கிடைக்கிறது, எனினும் எந்த பயனும் இல்லை. இறுதியில் எவ்வாறு இந்த ஜோடி இணைந்தது என்பதே கிளைமாக்ஸ்.
சினிமாபேட்டை அலசல் – சத்தியவானை மீட்க யமனுடன் போராடிய சாவித்ரி அதே ஒன் லைன் தான் ரோஜா மற்றும் ரணசிங்கம் இரண்டு படங்களுமே. ரோஜாவில் மணி சார் காதலுடன் தேசப்பற்றை புகுத்தி படத்தை நகர்த்தி இருப்பார். இங்கு விருமாண்டி காதலுடன் இன்றைய அரசியலை கலந்து, நெற்றி பொட்டில் அடிப்பது போன்று சொல்லியுள்ளார்.

ka-pae-ranasingam-on-zeeplex
மணிரத்தினம் என்ற பிராண்ட் இருந்த காரணத்தால் அவர் ரோஜா என தலைப்பு வைத்து விட்டார். இன்றைய மக்களை கவர் விஜய் சேதுபதியை முன் நிறுத்தி கணவர் பெயர் ரணசிங்கம் என தலைப்பு வைத்து விட்டனர். எல்லாம் வியாபார யுக்தி தான். அரியநாச்சி என தலைப்பு வைத்தால், நயன்தாரா நடிக்கும் பட்சத்தில் தான் கூட்டம் வரும். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தான் முக்கியத்துவம் என தெரிந்தும் நடித்த மக்கள் செல்வனுக்கு ஸ்பெஷல் க்ளாப்ஸ்.
ஆகமொத்தத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சந்திக்கும் அவலத்தை கண் முன் கொண்டு வந்த இந்த டீமுக்கு பல விருதுகள் கிடைக்க சினிமாபேட்டை சார்பில் வாழ்த்துக்கள்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
