Tamil Cinema News | சினிமா செய்திகள்
கோடிக்கணக்கில் வசூலை வாரிக்குவித்த க/பெ ரணசிங்கம்.. OTT தளத்திற்கு படையெடுக்கும் தயாரிப்பாளர்கள்
ரொம்ப நாட்கள் கழித்து விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வெளிவந்த படம் க.பெ.ரணசிங்கம், இந்தப் படத்தை விருமாண்டி இயக்கியுள்ளார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து உள்ளார். பெரும் போராட்டங்களுக்குப் பிறகு டிஜிட்டல் தளத்தில் வெளியான க.பெ.ரணசிங்கம் படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
தற்போது வரை கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் மேலானவர்கள் பார்த்துள்ளனர், ஒருமுறை இந்த படத்தை பார்ப்பதற்கு 199 ரூபாய் என்பதால், கிட்டத்தட்ட 8 கோடி வரை வசூல் கிடைத்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பட்ஜெட் படம் என்பதால் இந்த படத்தைப் பொருத்தவரை நல்ல வசூல் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வசூலை டிஜிட்டல் உரிமை தயாரிப்பாளரும், டிஜிட்டலில் வெளியிட்டவர்கள் சரிசமமாக பகிர்ந்து கொள்கின்றனர்.
இது தவிர சேட்டிலைட் உரிமம், கட்டணமில்லா ஓடிடி வெளியீட்டு உரிமம் என தயாரிப்பாளர் போட்ட முதலீட்டை கண்டிப்பாக எடுத்து விடலாம் என்ற நம்பிக்கை உள்ளதாம்.
இந்த வெற்றியை தொடர்ந்து மற்ற முன்னணி நடிகர்களின் படத்தை OTT தளத்தில் வெளியிடலாம் என தயாரிப்பாளர்களும் படையெடுக்கின்றனர்.

ka-pae-ranasingam-cinemapettai
