Connect with us

Cinemapettai

கதை திருட்டில் சிக்கிய க/பெ ரணசிங்கம்.. இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு இது வேற என குழப்பத்தில் விஜய் சேதுபதி

vijay-sethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கதை திருட்டில் சிக்கிய க/பெ ரணசிங்கம்.. இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு இது வேற என குழப்பத்தில் விஜய் சேதுபதி

OTT தளங்களில் வெளியான படங்களிலேயே தரமான படம் என பெயரெடுத்துள்ளது விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் படம்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தப் படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதைவிட முக்கியம் இந்த படம் பெரிய அளவில் வசூல் செய்துள்ளது.

பே பர் வியூ(ppv) என்ற கட்டண அடிப்படையில் அந்த படம் ஜிபிளக்ஸ் என்ற இணையதளத்தில் வெளியானது. தற்போது அந்த படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் விரைவில் வெளியாக இருக்கிறதாம்.

ka-pae-ranasingam

ka-pae-ranasingam

இப்படம் பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அனைவரும் சந்தோஷமாக இருந்த நிலையில் திடீரென க/பெ ரணசிங்கம் பட கதை திருடி எடுக்கப்பட்டது என ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது.

2017 ஆம் ஆண்டு கதைசொல்லி என்ற மாத இதழில் வெளியான சிறுகதையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 2018ஆம் ஆண்டு வெளியான தூக்கு கூடை என்ற புத்தகத்திலும் வெளியாகி உள்ளதாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் மிடறு முருகதாஸ் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் க/பெ ரணசிங்கம் படத்திற்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.

ஏற்கனவே விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கும் சிக்கல் வந்துள்ளது அவருக்கு சங்கடத்தை கொடுத்துள்ளதாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top