Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆர் சி பி அணியை நாக் – அவுட் செய்த கர்நாடகா பாய்ஸ் !
ஐபில் 11 வது சீசன் ஐபில் நிறைவை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. எந்த சீசனிலும் இல்லாதது போல இந்த சீசன் பரபரப்பு கூடுதலாகவே உள்ளது. இன்று நடக்கும் கடைசி போட்டி வரை பிலே – ஆப்புக்கு தகுதியாகும் கடைசி அணி எது என்ற சஸ்பென்ஸ் நீடிக்க உள்ளது.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களுரு
கோலி தலைமையில் எப்பொழுதுமே, சீசன் துவங்குவதற்கு முன் இந்த டீம் கப் ஜெயிக்க உள்ள அணிகளில் ஹாட் பாவோரிட் ஆக தான் ஆரம்பிக்கும். எனினும் முடிவு வேற விதமாகவே இருக்கும். ஆரம்ப போட்டிகளில் தோல்வியை சந்தித்த கோலியின் டீம், பின்னர் ஜெயிக்கும் டீம் காம்பினேஷனை கண்டு பிடித்துவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். முதலில் டெல்லி, அடுத்து பஞ்சாப், பின்னர் சன்ரைசர்ஸ் என தொடர்ந்து மூன்று வெற்றிகள் பெற்று அணிவர் கவனத்தையும் ஈர்த்தது.

kohli
RCB vs RR
நேற்று கட்டாயம் ஜெயிக்க வேண்டிய நிலையில் ராஜஸ்தான் அணியுடன் மோதியது. ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இங்கிலாந்து திரும்பியதால், இந்த அணி பலவீனம் அடைந்தது. அதனால் பெங்களூரு தான் ஜெயிக்கும் என்று அடித்து கூறினார் கிரிக்கெட் ஆர்வலர்கள்.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தனர். திரிபாதி 80 றன் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இறுதியில் அட்டகாசமாக ஆடிய க்ளாஸென் அதிரடியாக 32 றன் குவித்தார். உமேஷ் மற்றும் சாஹல் அற்புதமாக பந்து வீசினர்.
சேஸிங்கில் கோலியை அர்ப்ப ரன்னில் இழந்தாலும் பார்திவ், ஏ பி கூட்டணியில் அசத்தினார்கள். எனினும் மத்திய வரிசை பேட்டிங்கில் ஏற்பட்ட சொதப்பலால் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கினார். மேலும் ஐபில் 2018 ஐ விட்டு வெளியேறினர்.
கர்நாடகா பாய்ஸ்
பெங்களூரு அணியை பொறுத்தவரை பல ஜாம்பவான்கள் உள்ளனர். எனினும் உள்ளூர் வீரர்கள் கிடையாது. மாறாக ராஜஸ்தான் அணியில் ஆடும் லெவெனில் மூன்று கர்நாடக வீரர்கள் இருந்தனர். ஸ்டுவர்ட் பின்னி, க்ரிஷ்ணப்பா கெளதம் மற்றும் ஷ்ரேயஸ் கோபால்.
க்ரிஷ்ணப்பா கெளதம்

K Gowtham & Ajinkya Rahanae
அதிரடி பேட்ஸ்மேன் ஆன இவர் 19 வது ஓவரில் களம் இறங்கினார். 5 பாலில் 14 ரன்கள் எடுத்தார். பின்னர் ராஜஸ்தான் பந்துவீச்சை துவங்கியதும் இவரே. இரண்டு ஓவர்கள் வீசி, 6 ரன் மட்டுமே கொடுத்து கோலியின் விக்கெட்டை சாய்த்தார்.
ஷ்ரேயஸ் கோபால்
லெக் ஸ்பின்னர் ஆன இவர் இஷ் சோதியுடன் இணைந்து அருமையாக பந்து வீசினார். தன கூகிலி, பிலிப்பர், டர்ன் மூலமாக மத்திய வரிசை பாட்ஸ்மேனை நிலை குலைய வைத்தார். மேன் ஆப் தி மேட்ச் விருதையும் தட்டி சென்றார். தன் நன்கு ஓவரில், 16 ரன் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் எடுத்தார்.

Shreyas Gopal
நன்றாக செட் ஆன இரண்டு பேட்ஸ்மேன் பார்திவ் மற்றும் ஏ பி விக்கெட்டையும் இவரே வீழ்த்தினார். பார்திவ் , ஏ பி , மந்தீப் சிங் மூவரையும் ஸ்டும்ப்பிங் வகையிலும் ; மெயின் அலியை காட் அண்ட் பௌல் முறையில் அவுட் ஆக்கினார்.
மூன்றாவது வீரரான பின்னி அவர்களுக்கு பேட்டிங், பௌலிங் என எதிலும் வாய்ப்பு கிடைக்க வில்லை. என்ன தான் ஆர் சி பி அணி தோற்றாலும் “ஜெய் கர்நாடகா” என்று அந்த ரசிகர்கள் மனதை தேற்றிக்கொண்டு விட்டனர்.
