ரஜினியின் பலம், பலவீனத்தை புட்டு புட்டு வைத்த குரு கே.பாலச்சந்தர்.. சூப்பர் ஸ்டாரின் சக்சஸ் சீக்ரெட்

71 வயதிலும் ஹீரோவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோலிவுட்டில் மாஸ் காட்டுவதற்கு காரணம் ரசிகர்களிடம் அவருக்கு கிடைக்கும் அமோக ஆதரவு தான். சூப்பர் ஸ்டார் நின்னா ஸ்டைல், நடந்த ஸ்டைல் என அத்துணையிலும் தனக்கென ஒரு ஸ்டைல் வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பலம், பலவீனம் என்ன என்பதை அவருடைய கே பாலச்சந்தர் பேட்டி ஒன்றில் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

கர்நாடகாவில் சாதாரண பேருந்து ஓட்டுனராக இருந்த ரஜினிகாந்தை இயக்குனர் கே பாலச்சந்தர் தான் அபூர்வ ராகங்கள் படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து நடிக்க வைத்தார். இந்தப் படத்திற்குப் பிறகு பல ஹிட் படங்களை கொடுத்த புகழின் உச்சத்துக்கே சென்றார்.

Also Read: ஒரு தலைமுறையையே நாசமாக்கிய ரஜினி.. எல்லாத்துக்கும் பிள்ளையார் சுழி போட்ட பாலச்சந்தர்

எனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சக்சஸ் சீக்ரெட் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது. பொதுவாக ரஜினி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் அவருடைய ஆன்மீகம் தான் அவருக்கு பலம் என்று கே பாலச்சந்தர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் ரஜினி ஒரு படத்தை முடித்து விட்டால் அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, அவர் படும் டென்ஷன் தான் அவரின் பலவீனமாகும். ஏனென்றால் படத்தின் சூட்டிங் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், அந்தப் படத்தின் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் அப்படியே விட்டு விடனும்.

Also Read: ரஜினி, கவுண்டமணி கூட்டணியில் செம்ம லூட்டி அடித்த 6 படங்கள்.. பத்த வச்சுட்டியே பரட்ட!

ஆனால் படம் ரிலீஸ் ஆகும் வரை தேவையில்லாமல் டென்ஷன் படும் கேரக்டர் தான் ரஜினி என்று, கே பாலச்சந்தர் வெளிப்படையாக பேசியிருக்கிறார். மேலும் சினிமாவில் தற்போது வரை டாப் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினி, இப்படி டென்ஷன் ஆகுவதை மட்டும் விட்டு விட வேண்டும் என்றும் கே பாலச்சந்தர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், அவர் நடிப்பில் தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகுவதால் அந்த படத்தை குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

Also Read: ஆளும் கட்சியினால் தோல்வியடைந்த பாபா.. ரஜினி தூசி தட்ட இப்படி ஒரு வெறித்தனமான காரணமா!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்