Tamil Cinema News | சினிமா செய்திகள்
கே பாலச்சந்தர் மற்றும் இளையராஜா பிரிந்ததற்கு இதுதான் காரணம்.. மாஸ் ஹீரோகளுக்காக பாலச்சந்தரை ஓரங்கட்டினாராம்!
தமிழ் சினிமாவில் திடீரென புகழ்பெற்ற ஆட்கள் அந்த புகழ் போதையில் தன்னை தூக்கி விட்டவர்களை மதிக்காமல் செல்வது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் பலரை பார்த்துள்ளோம்.
ஆனால் இளையராஜாவிடம் முன்கோபம் இருப்பதால் பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை பகைத்து கொண்டதாக பலரும் பல பேட்டிகளில் தெரிவித்ததை பார்த்திருக்கிறோம்.
தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற இயக்குனர் கே பாலச்சந்தர். இன்று சரித்திரம் படைத்த நாயகர்களாக இருக்கும் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரின் ஆஸ்தான இயக்குனர் இவர்தான்.
இந்நிலையில் 1989 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த திரைப்படம் புது புது அர்த்தங்கள். ரகுமான், சித்ரா, கீதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியானது.
ஆனால் அதே ஆண்டு அதே தேதியில் ரஜினிகாந்த் நடித்த மாப்பிள்ளை படமும், கமல்ஹாசன் மற்றும் பிரபு நடித்த வெற்றிவிழா படமும் வெளியானது. அந்தப் படங்களுக்கும் இளையராஜாதான் இசை.
கே பாலச்சந்தர் இளையராஜாவிடம் முதலிலேயே புதுப்புது அர்த்தங்கள் படத்திற்கான கமிட்மெண்ட் வைத்துக் கொண்டாராம். ஆனால் இடையில் வந்த கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவரின் படங்களையும் முடித்துவிட்டு தான் உங்களுக்குத் தருவேன் என கூறிவிட்டாராம்.
அந்த சமயத்தில் பாலச்சந்தர் படங்களுக்கு பெரிய மவுசு இல்லாத காலகட்டம். ரஜினி மற்றும் கமல் மாஸ் ஹீரோக்களாக வலம் வந்த நேரம்.
இதனால் இளையராஜா மற்றும் கே பாலச்சந்தர் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. ஆனால் இந்த மோதலில் ரஜினி மற்றும் கமல் தலையிட்டு எதுவும் சொல்லவில்லையே என பாலச்சந்தருக்கு ஒரு வருத்தம் இருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது.
அதன்பிறகு இளையராஜாவும் கோபத்தில் பாலச்சந்தர் படங்களுக்கு இனி இசையமைக்க மாட்டேன் என தெரிவித்து விட்டாராம். அப்போது பிரிந்தவர்கள்தான் அதன்பிறகு இணையவே இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.
