Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜிம்மில் தலைகீழாக தொங்கி குறளி வித்தை காட்டும் ஜோதிகாவின் புகைப்படம் .. சூர்யாவுக்கே டப் கொடுப்பாங்க போல

ஜோதிகா அடுத்தடுத்து சினிமாவில் ஜெயிப்பதற்கு அவருடைய கணவர் சூர்யா மிகப்பெரிய பங்களிப்பு கொடுத்தார்.

நடிகை ஜோதிகா மும்பையில் இருந்து, தமிழ் சினிமாவிற்கு வந்து 90களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். நடிகர் சூர்யாவுடன் ஆன காதல் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு, கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து இவர் மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதற்கு ஏற்ற மாதிரி 36 வயதினிலே திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு கம் பேக் ஆக அமைந்தது.

ஜோதிகா அடுத்தடுத்து சினிமாவில் ஜெயிப்பதற்கு அவருடைய கணவர் சூர்யா மிகப்பெரிய பங்களிப்பு கொடுத்தார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையினை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஜோதிகாவின் படங்களை ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டது தான் 2D என்டர்டெயின்மென்ட் என்னும் தயாரிப்பு நிறுவனம் கூட.

Also Read:சொந்த மண்ணுக்கு டாட்டா காட்டி மும்பைக்கு சென்ற ஜோ.. மனைவிக்காக பல கோடிகளை வாரி இறைக்கும் சூர்யா

சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் மீண்டும் நடித்துக் கொண்டிருந்த ஜோதிகாவுக்கு சமீபகாலமாக வெளியில் இருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து ஜோதிகா ஒரு படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். மேலும் சினிமாவில் தன்னுடைய அடுத்த கட்ட வளர்ச்சிக்காகவும், பிள்ளைகளின் படிப்புக்காகவும் கூட்டுக் குடும்பமாக இருந்த தம்பதிகள் இருவரும் மும்பையில் சொந்த வீடு வாங்கி குடியேறி இருக்கிறார்கள்.

சூர்யா மற்றும் ஜோதிகாவின் இந்த மும்பை அடைக்கலம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஜோதிகா பேண்ட் மற்றும் டி ஷர்ட் அணிந்து கொண்டு மும்பையில் இருக்கும் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பயங்கர வைரலானது. ஒரு பக்கம் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தாலும், மறுபக்கம் இதற்காகத்தான் ஜோதிகா மும்பை சென்று செட்டில் ஆகி இருக்கிறார் என்று நெகட்டிவ் விமர்சனங்களும் வர தொடங்கின.

Also Read:ஓவர் நெருக்கம் காட்டும் சூர்யா.. எல்லா பக்கமும் கூடவே ஒட்டிக்கொண்டு சுற்றும் ஹீரோயின்

இதற்கிடையில் இன்று ஜோதிகா, தான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். வயிறு மற்றும் இடுப்பு சதை பகுதிகளை குறைப்பதற்காக தலைகீழாக நிற்கும் பயிற்சியை ஜோதிகா தொடர்ந்து செய்து வரும் வீடியோக்களை ஒன்று சேர்த்து ஒரு வீடியோவாக பதிவிட்டிருக்கிறார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.

 

              ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் ஜோதிகா

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான ஜோதிகா தற்போது செய்து வரும் கடுமையான உடற்பயிற்சி பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், சினிமா வாய்ப்பின் மேல் மீண்டும் ஆசை வந்ததால் இவர் இப்போது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார் என நெகட்டிவ் விமர்சனங்களும் வருகின்றன. ஒரு வயதிற்கு மேல் தன்னை பிட்னஸ் ஆக வைத்துக்கொள்ள ஜோதிகா ஆசைப்படுவதில் எந்தத் தவறும் இல்லை என்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Also Read:லியோவை ப்ரீ பிசினஸில் முந்திய சூர்யா 42.. உண்மை நிலவரத்தை போட்டு உடைத்த தயாரிப்பாளர்

 

 

Continue Reading
To Top