சர்ச்சைக்கு உள்ளான ஜோதிகாவின் இன்ஸ்டா பதிவு.. தேரை இழுத்து தெருவில் விட்ட சிவகுமாரின் மருமகள்

Jyotika: தேரை இழுத்து தெருவில் விடுவது என்று ஒரு சொலவடை சொல்வார்கள். அது ஜோதிகாவுக்கு சரியாகிவிட்டது. நடிகை ஜோதிகா சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார். அந்த விழாவிற்கு அவர் அணிந்து வந்திருந்த ஆடை பெரிய அளவில் சர்ச்சை ஆனது.

இந்த விஷயம் என்று கிடையாது ஜோதிகா மும்பைக்கு குடியேறியதில் இருந்தே அவருடைய ஒரு சில நடவடிக்கைகள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு திருப்திகரமாக இல்லை. ஒருவரின் ஆடை விருப்பத்தை பற்றி யாருமே கருத்து கூற கூடாது என்பது நிதர்சனமான உண்மை.

ஜோதிகா எப்படி நினைக்கிறாரோ அப்படி ஆடை அணிய அவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. இருந்தோம் அவருடைய ஆடை விஷயம் ஏன் இந்த அளவுக்கு சர்ச்சையாகிறது என்பதை யோசித்தால் ஒரு சில விஷயம் புரியும்.

சூரியாவை திருமணம் செய்வதற்கு முன்பு வரை ஜோதிகாவை சினிமாவை தாண்டி யாரும் பெரிய அளவில் நோட் செய்தது கிடையாது. திருமணத்திற்கு பிறகு ஜோதிகா மீது சிவக்குமார் வீட்டு மருமகள் என்ற பெரிய பொறுப்பு வந்தது.

ஜோதிகாவும் அந்த பொறுப்பை சரியாக கவனித்து வந்தார். மும்பையில் இருந்து வந்து ஒரு நடிகை அச்சு அசல் கோயம்புத்தூர் வீட்டு மருமகள் போலவே மாறிவிட்டாரே என அத்தனை பேரும் மூக்கின் மேல் விரல் வைத்தார்கள்.

எல்லா நிகழ்ச்சிகளுக்கும் புடவை கட்டிக் கொண்டு வருவது. தமிழில் மட்டும் தான் பேசுவது என ஜோதிகா தன்னை மொத்தமாக மாற்றிக் கொண்டார். இதன் பிறகு நடிகை என்பதை தாண்டி ஜோதிகாவுக்கு ரசிகர்களிடையே நல்ல பெயர் கிடைத்தது.

இப்படி குறிப்பிட்ட சில விஷயத்துக்காக ரசிகர்கள் அவரை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது ஜோதிகா அதிலிருந்து மாறியது தான் இப்போது பிரச்சனை. அவர் ஆரம்பத்தில் இருந்து அப்படி இருந்திருந்தால் யாருமே இதை பெரிதாக பேசியிருக்க மாட்டார்கள்.

தேரை இழுத்து தெருவில் விட்ட சிவகுமாரின் மருமகள்

இப்படி எல்லாம் ஒரு சில விஷயங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சிவகுமார் சினிமா நடிகையை திருமணம் செய்யக்கூடாது என தடுத்திருக்கிறார் என்று இப்போது சிலர் பேசி வருகிறார்கள். எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் ஜோதிகா அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் ‘Redefinine myself’ என கேப்சன் பதிவிட்டிருக்கிறார். அதாவது தன்னை மறு சீரமைப்பு செய்து கொண்டிருப்பதாக பதிவிட்டிருக்கிறார்.

ஜோதிகாவின் இந்த மாற்றம் சூர்யா மற்றும் அவருடைய வீட்டாருக்கு மகிழ்ச்சியை போட்டுத் தெரிகிறதா இல்லை சலசலப்புடன் தான் குடும்பம் செல்கிறதா என்பதுதான் பொது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

Jyothika insta post
Jyothika insta post

Next Story

- Advertisement -