Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-jyothika

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிப்பில் இருந்து முற்றிலுமாக விலகும் ஜோதிகா.. பின்னால் இருந்து சூர்யா போடும் அஸ்திவாரம்

சூர்யா நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதாவது விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்குகாக சூர்யா ரோலக்ஸ் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் கமல்ஹாசன் தனக்காக சூர்யா சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக விக்ரம் 3வது படத்தில் சூர்யாவிற்கு பெருவாரியான காட்சிகள் இருக்கும் என தெரிவித்திருந்தார்.

சமீபகாலமாக சூர்யா-ஜோதிகா சமூகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல விஷயங்களுக்கு குரல் கொடுத்தும் பல்வேறு விதமான சிக்கலுக்கும் உள்ளாகி வருகின்றனர். ஜோதிகா திருமணத்திற்கு பிறகு படங்கள் நடிக்கக்கூடாது என சூர்யாவின் குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தனர். ஆனால் பல வருடங்களுக்கு பிறகு தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் தேர்வு செய்து நடித்து வந்தார்.

ஆனால் இனிமேல் திரைப் படங்களில் நடிப்பதையும் முற்றிலுமாக தவிர்க்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் சூர்யாவின் குடும்பத்திலிருந்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது தான் எனக் கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் ஜோதிகா அரசியலில் பயணம் செய்ய இருப்பதால்தான் திரைப்படங்களில் இருந்து விலகப் போவதாக கூறி வருகின்றனர்.

அதாவது ஜோதிகாவின் அக்கா நக்மா ஒரு அரசியல்வாதியாக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். ஜோதிகாவிற்கு படங்களில் நடிப்பதை தாண்டி பல துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. மேலும் சூர்யாவும் சமூகம் சார்ந்த விஷயங்களில் குரல் கொடுப்பதும் அவ்வப்போது தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவதால் ஜோதிகா அரசியலுக்கு வருவதற்கு சூர்யாவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறி வருகின்றனர்.

இதனால் தான் இனிமேல் ஜோதிகா படங்களில் நடிக்கப்போவதில்லை என சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஜோதிகா அரசியலுக்கு வருவதால் தான் திரைப்படங்களில் நடிக்க மறுக்கிறாரா இல்லை சூர்யா குடும்பத்தினர் கொடுக்கும் அழுத்தம் காரணமாக நடிக்க மறுக்கிறாரா என்பது குறித்த தகவல் இன்னும் உறுதியாக வெளியாகவில்லை.

Continue Reading
To Top