Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரண்ட்ஸ் படத்தில் விஜய்யுடன் நடிக்க மறுத்த ஜோதிகா.. போட்டோஷூட்டுக்கு பிறகு நடந்தது என்ன?
குஷி படம் ஜோதிகாவின் சினிமா கேரியரில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி முக்கிய நாயகியாக வலம் வர வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் ஜோதிகா நடித்த படங்களிலேயே குஷி தான் ஜோதிகாவுக்கு பிடிக்காத படம் என அவரது இயக்குனர் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அதன் பிறகு கூட இருவரும் சேர்ந்து திருமலை என்ற படத்தில் நடித்து இருந்தனர். உயிரிலே கலந்தது படப்பிடிப்பின்போது சூர்யா மற்றும் ஜோதிகா இடையே காதல் மலர்ந்ததாக அப்பொழுதே பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. ஆனால் காக்க காக்க படத்திற்கு பிறகுதான் இருவரின் காதல் கதையும் வெளியில் தெரிய வந்தது.
இருந்தும் பிரண்ட்ஸ் படத்திலிருந்து ஜோதிகா விலகியதற்கு குஷி படத்தில் நடித்தது தான் காரணமா எனவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்தன. ஏன் சமீபத்தில் கூட மெர்சல் படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஜோதிகாவை தான் அணுகினார் அட்லி. ஆனால் அப்பவும் கதைகூட கேட்காமல் விருப்பமில்லை என்று கூறியது ஜோதிகா மற்றும் விஜய்க்கு இடையே ஏதேனும் பிரச்சினையா என்று சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

friends-previous-crew
ஆனால் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால் இந்த செய்தியை நம்புவதா என்பது தெரியவில்லை. ஒருவேளை கதைக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்ற சந்தேகம் கூட இருந்திருக்கலாம்.
சமீபத்தில் திருமணத்திற்குப் பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்சை தொடங்கிய ஜோதிகா தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வயதானாலும் சிங்கம் சிங்கம் தான் என்பதை நிரூபித்து வருகிறார்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
