Tamil Cinema News | சினிமா செய்திகள்
பூஜையுடன் துவங்கியது ஜோதிகா – ரேவதி இணையும் படம். இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா ?

பிரபுதேவாவின் சூப்பர் ஹிட் படமான குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் தான் ஜோதிகா அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.
குலேபகாவலி படத்தை போலவே இப்படத்திலும் ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், ஜெகன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

2D
காமெடி ஜானரில் ரெடியாகும் இப்படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. சூர்யாவின் 2 டி என்டேர்டைன்மெண்ட் தான் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
Happy to announce our next with #Jyotika, as always, it's a pleasure and honor?#JyothikasNext@Suriya_offl @rajsekarpandian @dirkalyan @iYogiBabu @Composer_Vishal @thanga18 @SF2_official @proyuvraaj pic.twitter.com/QiTDOlMHGh
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) February 10, 2019
விஷால் சந்திரசேகர் இசை. தன் சென்ற படத்தின் டீமான ஆனந்தகுமார் மற்றும் விஜய் வேலுக்குட்டி இருவரையுமே இப்படத்திலும் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டராக டீம் சேர்த்துள்ளார் இயக்குனர் கல்யாண்.
We are happy to have @Composer_Vishal on board as the composer for #JyothikasNext! @Suriya_offl @rajsekarpandian @iYogiBabu @anandakumardop @editorvijay @thanga18 @SF2_official @proyuvraaj pic.twitter.com/ddp6snQqSv
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) February 10, 2019
இன்று பூஜை நடைபெற்றது, நாளை முதல் ஷூட்டிங் நடக்கவுள்ளது.

Jyothika
