கிட்டத்தட்ட ஒரே வயதுடைய நடிகருக்கு தங்கச்சியாக நடிக்கும் ஜோதிகா.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் புதிய படம்

jyothika-cinemapettai
jyothika-cinemapettai

ஒரு காலகட்டங்களில் கமர்சியல் நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சிலகாலம் செட்டிலாகிவிட்டார். அதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற அதனை தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வந்தார். கடைசியாக ஜோதிகா நடிப்பில் தம்பி என்ற படம் வெளியானது.

இதில் தன்னுடைய கணவரின் சகோதரர் கார்த்தி மற்றும் சத்யராஜ் ஆகியோர் உடன் நடித்திருந்தார். சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சத்தில் வந்திருந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஜோதிகா நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் பல படங்கள் பாதியில் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. தற்போது படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதில் ஒரு படம் தான் ஜோதிகா மற்றும் சசிகுமார் நடிக்கும் திரைப்படம். ஜோதிகாவுக்கும் சசிகுமாருக்கு கிட்டதட்ட ஒரே வயது தான். ஓரிரண்டு வயதுகள் முன்ன பின்ன இருக்கலாம். இந்நிலையில் அவருக்கு தங்கச்சியாக ஜோதிகா நடிப்பது எப்படி இருக்கும்? என்பதை பார்ப்பதற்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்தை சூர்யா தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார். ஜோதிகாவுக்கு பெண்கள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதன் காரணமாகவே அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

jyothika-sasikumar-movie
jyothika-sasikumar-movie
Advertisement Amazon Prime Banner