திருமலை படத்தில் முதலில் விஜய்க்கு ஜோடி ஜோதிகா இல்லை.. பிரபல நடிகரின் மனைவிதான்.. வெளிவந்த புகைப்படம்

இளையதளபதி விஜய் நடிப்பில் ரமணா இயக்கத்தில் வெளிவந்த பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் திருமலை. அதுவரை காதல் மன்னனாக வலம் வந்த விஜய் அதிரடி கதாநாயகனாக மாற்றிய பெருமை திருமலை படத்திற்கு உண்டு.

அதுமட்டுமல்லாமல் வசூலிலும் சக்கை போடு போட்டது. அதன்பிறகுதான் விஜய் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக உயர்ந்தார். திருமலை படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்து இருந்தார்.

பணக்கார வீட்டு பொண்ணுக்கும் மெக்கானிக் பையனுக்கும் இடையே உள்ள காதலை அதிரடி கலந்த கமர்சியல் கதையாக உருவாக்கியிருந்தார் இயக்குனர் ரமணா. இந்நிலையில் முதலில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்தது தற்போதைய தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவர்களின் மனைவி நம்ரதா.

vijay-namratha
vijay-namratha

இந்த படத்தில் அவர் பணியாற்றிய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறிது நாட்கள் பணியாற்றிய பிறகு கால்ஷீட் பிரச்சனை காரணமாக திருமலை படத்திலிருந்து நம்ரதா விலகினார். அதன்பிறகுதான் ஜோதிகா திருமலை படத்தில் நடித்தார்.

vijay-namratha-thirumalai
vijay-namratha-thirumalai

மகேஷ்பாபுவின் படங்கள் பெரிதும் அப்போதைய காலகட்டங்களில் விஜய்தான் ரீமேக் செய்து வந்தார். கில்லி போக்கிரி போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.

maheshbabu-namratha
maheshbabu-namratha

Leave a Comment