fbpx
Connect with us

Cinemapettai

ஜோதிகா படம் ஒரு புழுதான்.. அத வச்சிதான் சுறாவ புடிக்க போறோம்.. அமேசான் அடுத்த லிஸ்டில் விஜய், சூர்யா படம்

Tamil Nadu | தமிழ் நாடு

ஜோதிகா படம் ஒரு புழுதான்.. அத வச்சிதான் சுறாவ புடிக்க போறோம்.. அமேசான் அடுத்த லிஸ்டில் விஜய், சூர்யா படம்

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதங்களையும் தாண்டி போய்க் கொண்டிருக்கின்றது. இதனால், பல துறைகள் தொழில் முடக்கப்பட்டு கோடிக்கணக்கான இழப்புகளை சந்தித்து வருகிறது.

இதற்கு தமிழ் சினிமா மட்டும் விதிவிலக்கா என்ன, படப்பிடிப்பு, சீரியல், தியேட்டர்கள் என்று அனைத்துமே மூடப்பட்டு ஆயிரம் கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை அடைந்துள்ளது. இது ஒருபுறமிருக்க தயாரிப்பாளர்களுக்கு வட்டி குட்டி போட்டு அதிகமான தலைவலியை மற்றும் மன அழுத்தத்தை கொடுப்பதால் சில படங்கள் தற்போது ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு பிக்பாஸ் பிரபலமான ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த தாராள பிரபு படம் மீண்டும் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

தற்போது ஜோதிகா நடிப்பில் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஆன்லைனில் வெளியிடுவதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது தியேட்டர் உரிமையாளர்கள் கடும் கோபத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இனி 2டி என்டர்டெய்ன்மென்ட் மூலம் வெளிவரும் படங்களை ஒளிபரப்ப மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சூரரைப்போற்று படமும் ஆன்லைனில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஜோதிகாவின் படம் 4.5 கோடி உருவாக்கப்பட்டு 9 கோடி வரை ஆன்லைன் வர்த்தகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதாவது படக்குழுவினருக்கு இது சிரமம் இல்லாத வேலை கூட ஆனால் சில கட்டுப்பாடுகளுடன் உள்ளது. இது ஒருபுறமிருக்க இனி வெளிவரும் அனைத்து படங்களும் ஆன்லைனில் வருவதற்கான முயற்சிகள் போய்க்கொண்டிருக்கின்றன. இதனால் பல தியேட்டர்கள் மூடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆன்லைன் மூலம் வெளியாகும் ஒரு சில படங்களுக்கு அடிமாட்டு விலையில் கேட்பதாகவும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இதனால் தமிழ் சினிமா  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாகி விடக்கூடாது அதாவது ஒரு தனியார் நிறுவனம் நினைத்தால் தமிழ் சினிமாவின் குடுமியை எளிதாகப் பிடித்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறது.

லாக் டவுன் முடிவதற்குள் இதற்கு முடிவு கட்டவில்லை என்றால் தியேட்டர்களில் சினிமா படங்கள் வெளிவருவது பெரும் சிக்கலில் முடியும். இப்படி கார்ப்பரேட் பொறியில் மாட்டிக் கொண்டவர் தான் ஜோதிகா என்பது தொடக்கம்தான். அடுத்து மாஸ்டர்க்கு 130 கோடியும் சூரரைப் போற்றுக்கு 50 கோடியும் விலை வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

இதனால் விரைவில் இந்த சிக்கலிலிருந்து விடுபட வேண்டும் தியேட்டர்கள் மற்றும் அதில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கான வேலையை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் பெருமளவு வருகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top