Tamil Cinema News | சினிமா செய்திகள்
மலேசிய கல்வி மந்திரிக்கு படக்குழு சார்பில் நன்றிகளை தெரிவித்த ஜோதிகா
கெளதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசி’. இப்படம் அரசு பள்ளி மற்றும் அதன் நிலை எப்படி உள்ளது என்பதனை வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தை பார்த்து விட்டு அந்த கருத்தை பாராட்டி மலேசிய அமைச்சர் மாஸ்லே பின் மாலிக் சமூகவலைத்தள பக்கத்தில் பாராட்டியதை நாம் முன்பே பகிர்ந்திருந்தோம்.
இந்நிலையில் மலேசிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜோதிகா கடிதம் எழுதியுள்ளார். இதனை சூர்யா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதன் விவரம் இதோ …
ஒரு இந்திய திரைப்படத்தை பார்த்து பாராட்டி நீங்கள் ட்வீட் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. அந்த படத்தில் கூறியது போல் கல்வியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற சிந்தனைக்கு நன்றி. கல்வி கொள்கையில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும் என்ற எங்கள் டீம்மின் நோக்கிற்கு உங்கள் பாராட்டு உத்வேகத்தை தந்தது.
இந்த படத்தில் பணிபுரிந்த 90% பேர் அரசு பள்ளியில் படித்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இந்த படத்தில் காமித்தோம் திரையில். பணம் பண்ணும் நோக்கில் எடுத்த படம் அல்ல. அடிப்படை மக்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும், அனைத்து தரப்பினர்களும் கல்வி விஷயத்தில் சமமாய் நடத்தப்பட வேண்டும் என்ற எங்களது எண்ணத்தின் ஒரு சிறு வெளிப்பாடு தான் இந்த படம்.
With Respect and Gratitude to #Malaysian Education Minister Hon’ble Dr. Maszlee Malik from #Raatchasi Team & #Jyotika @maszlee@sy_gowthamraj @DreamWarriorpic @prabhu_sr @RSeanRoldan #MalaysianAudience pic.twitter.com/ou8OonNJui
— Suriya Sivakumar (@Suriya_offl) September 5, 2019
இந்தியாவில் மிகப்பெரிய கல்வி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எங்களது இந்த முயற்சிக்கு எங்களது கல்வி அமைச்சரும் இந்த படத்தை பார்த்து பாராட்டியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது, மேலும் சில மாறுதல்களையும் செய்ய உள்ளார் அவர். எங்கள் படக்குழுவினர்களுக்கு நீங்கள் கொடுத்த பாராட்டு இந்த படத்தையும் இதன் கருத்தையும் உலக அளவில் எடுத்து செல்ல உதவியாய் இருக்கும்.
Thank you to the whole #Raatchasi Team. Education is one of the most important investments a country can make in its people and its future, no matter which part of the globe. Keep on producing wonderful films like this and I will be waiting for them. Good luck! https://t.co/CMV8Rd6zHu
— Maszlee Malik (@maszlee) September 5, 2019
