‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

இந்த படத்தில் ஜோதிகா உள்ளிட்ட மூன்று ஹீரோயின்கள் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது மகளிர் மட்டும் என்ற படத்தில் நடித்து வரும் அவர் விஜய் படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தன் கேரக்டருக்கு சில மாறுதல்கள் செய்யுமாறு அட்லீயிடம் ஜோதிகா கேட்டுள்ளாராம், அதை செய்தால் தான் படத்தில் நடிப்பேன் என உறுதியாக கூறிவிட்டாராம்.

அதனால் இயக்குனர் தற்போது ஜோதிகாவிற்கு பதிலாக வேறொரு ஹீரோயினை நடிக்கவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம்.இதனால் ஜோதிகா இந்த படத்தில் நடிப்பது சந்தேகம் தான்.

இப்படத்தின் கதை, வசனம் அட்லீ எழுத, திரைக்கதை அமைத்துள்ளார் ‘பாகுபலி’ கதாசிரியர் விஜயேந்திர பிரசாத். இவர் இயக்குநர் ராஜமெளலியின் தந்தையாவார்.

சத்யராஜ், வடிவேலு,, காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா, சத்யன் ஆகியோர் இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்