Tamil Cinema News | சினிமா செய்திகள்
கார்த்தி லிப் லாக் அடிக்க ஜோதிகா கொடுத்த டிப்ஸ்.. என்ன முருகேசா இதெல்லாம்!
சமீபத்தில் கார்த்தி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான தம்பி திரைப்படம் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக சென்று கொண்டிருக்கிறது. ஃபேமிலி என்டர்டெய்னர் என்ற பெயர் பெற்றதால் வசூலில் எந்த குறையும் இல்லை.
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். இவர் சசிகுமார் ஜோடியாக வெற்றிவேல் என்ற படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் இடையில் எடுக்கப்பட்ட முதல் காட்சியே லிப் லாக் சீன் தான் என நிகிலா சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த சீனில் நடிப்பதற்கு கார்த்தி முதலில் மிகவும் பதட்டம் அடைந்ததாகவும், பிறகு கார்த்திக்கின் அண்ணி ஜோதிகா கொடுத்த அட்வைசுக்கு பிறகு தான் அந்த காட்சியில் அவர் நடித்ததாக நிகிலா கூறியுள்ளார்.
உண்மையிலேயே தனது அண்ணி ஜோதிகா முன்னிலையில் லிப் லாக் கொடுக்க வேண்டுமா என யோசித்ததாகவும், காட்சிக்கு தேவை என்பதன் அடிப்படையில் அதை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
திருமணத்திற்கு முன்பு ஜோதிகா லிப் லாக் காட்சிகளில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
