
Jyothika : ஜோதிகா திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்காமல் இருந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் என்ட்ரி கொடுத்திருந்தார். தமிழில் 36 வயதினிலே, உடன்பிறப்பே, மகளிர் மட்டும் போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து மலையாளத்தில் மம்முட்டியுடன் காதல் தி கோர் நடித்திருந்தார். ஆனால் இப்போது அவருக்கு பாலிவுட்டில் தான் பட வாய்ப்பு குவிந்த வண்ணம் இருக்கிறது. அக்ஷய் குமாருடன் அவர் நடித்த சைத்தான் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு ஸ்ரீகாந்த் படத்தில் நடித்திருந்தார். இப்போது ஹிந்தியில் ஒரு பாலிவுட் வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இந்த சூழலில் அடிக்கடி ஜோதிகா ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
தென்னிந்திய சினிமாவை விமர்சித்த ஜோதிகா
அந்த வகையில் இப்போது தென்னிந்திய சினிமாவை பற்றி அவர் கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறது. அதாவது இங்கு ஆணாதிக்க சினிமாவாகத்தான் உள்ளது. ஏனென்றால் ஒரு ஹீரோவை வைத்து தான் படத்தின் கதையை எழுதுகிறார்கள்.
அதில் கதாநாயகிகள் என்றால் நடனம் ஆடுவது, ஆண்களைப் பற்றி புகழ்ந்து பேச ஆகியவற்றிற்கு தான் பயன்படுகிறார்கள். அவர்களின் திறமையை வெளிகாட்டும் படி படங்கள் வருவதில்லை என்று கூறியிருக்கிறார். அதனால் தான் பாலிவுட் பக்கம் சென்றேன் என்று ஜோதிகா கூறியிருக்கிறார்.
மேலும் தமிழ் பட வாய்ப்புகள் வந்தாலும் ஜோதிகா மறுத்து விடுகிறாராம். திருமணத்திற்கு முன்பு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் தான் ஜோதிகா. இவ்வாறு ஏற்றிவிட்ட ஏணியே இப்போது பாலிவுட் சென்றவுடன் எட்டி உதைப்பதா என பலரும் அவரை கேட்டு வருகின்றனர்.