Connect with us
Cinemapettai

Cinemapettai

jyothika-keerthy-suresh-cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

நீ பேசுறத பேசு.. சட்டுபுட்டுன்னு அமேசானில் ரிலீஸ் தேதியை அறிவித்த ஜோதிகா.. கூடவே கீர்த்தி சுரேஷும் வராங்க

OTT இல் படத்தை ரிலீஸ் பண்ணும் தயாரிப்பாளர்களை தியேட்டர்காரர்கள் ஏதோ கொலை செய்தவர்களை போல வெறுப்புடன் பார்த்து வருகிறார்கள். தயாரிப்பாளர்களும், சின்ன படங்களுக்கு நீங்க தியேட்டர் கொடுத்தா, நாங்க ஏன் OTT பக்கம் போறோம் என கிண்டலாக பார்க்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தனது சொந்த தயாரிப்பில் மனைவி ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்மகள் வந்தாள் படத்தை OTT தளத்திற்கு விற்றார். இந்த செய்தி தயாரிப்பாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், தியேட்டர்காரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் கிளம்பியது.

அதுமட்டுமில்லாமல் தியேட்டர்காரர்கள் ஒன்று சேர்ந்து இனி சூர்யா மற்றும் அவரது உறவினர்கள் தயாரிக்கும் படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். தற்போது பொன்மகள் வந்தாள் படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 29ஆம் தேதி அந்த படம் அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ponmagal-vandhal-jyothika

ponmagal-vandhal-jyothika

அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த பெண் குயின் படமும் முடிந்து நீண்ட நாட்களாகிவிட்டது. அதையும் கார்த்திக் சுப்புராஜ் அமேசானுக்கு விற்றுவிட்டார். பெண் குயின் படமும் வருகிற ஜூன் மாதம் 19ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

penguin-keerthy-suresh

penguin-keerthy-suresh

எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவதைப் போல ஏற்கனவே கடுப்பில் இருந்த தியேட்டர்காரர்களுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும் படி செய்துவிட்டார்கள்.

Continue Reading
To Top