(சில நேரங்களில் நேரடியாக விஷயத்துக்கு செல்லமால், கூடுதல் தகவல் சொல்லவேண்டியது எங்கள் கடமையாகி விடுகிறது. இதுவரை எந்த ஆர்ட்டிகளும் இவரை பற்றி நம் தலத்தில் எழுதியதில்லை. எனவே இவரை பற்றிய சிறிய குறிப்பை முதலில் பார்ப்போம்.)

இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். நம்ம மதுரையில் பிறந்து வளர்ந்தவர். கிருத்தவ தேவாலயம் தான் இவரின் இசை ஆர்வத்தை வளர்த்தது. சிறுவனான ஜஸ்டீன் தேவாலயத்தில் இருக்கும் இசைக் கருவிகளை முதலில் இசைத்துப் பார்க்க ஆரம்பித்தார். பின்னர் மற்றவர்கள் இசைப்பதை கவனித்துச் சந்தேகம் கேட்டுத் தெளிந்து கீபோர்டு, கித்தார் போன்ற இசைக் கருவிகளைத் தானாகப் பயின்றார்.

Justin Prabhakaran

அமெரிக்கன் கல்லூரியில் பி.எஸ்சி. விலங்கியல் படிப்பில் சேர்ந்தார். கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து இசை பேண்டை ஆரம்பித்து நடத்தினார். சிவப்பதிகாரம் படப்பிடிப்பு மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடந்தது. அப்போது ஒளிப்பதிவாளர் கோபிநாத்தைச் சந்தித்து சினிமாவில் இசையமைக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். கோபிநாத்தின் அறிவுரையின் காரணமாக சென்னை எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் ஒலிப் பொறியியல் பிரிவில் சேர்ந்தார்.

அதிகம் படித்தவை:  துண்டிக்கப்படவுள்ள ஜியோ சேவைகள்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

கிட்டத்தட்ட 55 குறும்படங்களுக்கு இசையைமைத்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் இரண்டு சீசனில் சிறந்த குறும்பட இசையமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹாரிஸ் ஜெயராஜிடம் துணை சவுண்ட் இன்ஜினீயராகச் சேர்ந்து கோ படம் தொடங்கி 12 படங்களில் வேலை பார்த்தார். குறும்படமாக வெளிவந்த பண்ணையாரும் பத்மினியும் படத்தைத் திரைப்படமாக்கும் வாய்ப்பு இயக்குனர் அருண் குமாருக்கு கிடைக்க, இசையமைப்பாளராக அறிமுகமாகும் வாய்ப்பு நம் ஜஸ்டினுக்கும் கிடைத்தது.

Justin-Prabhakaran–Kaala-Koothu- AUDIO LAUNCH

இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என கலக்கும் திறமை உடையவர் இவர். பண்ணையாரும் பத்மினியும், ஆரஞ்சு மிட்டாய், ஒருநாள் கூத்து போன்றவை இவருக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்து.

அதிகம் படித்தவை:  திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பிரபல நடிகைகள்!

தெலுங்கில் அறிமுகமாகிறார்

இதற்கு முன்னர் இவர் மலையாளத்தில் ஒரு படத்துக்கு இசை அமைத்துள்ளார். எனினும் தெலுங்கில் இப்பொழுது தான் அறிமுகமாகிறார். இன்னமும் பெயரிடப்படாத இப்படத்தில் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை பரத் கம்மா இயக்குகிறார். ‘மரோ பிரபஞ்சம்’ என்ற குறும்படத்தில் இயக்குனரும் ஜஸ்டினும் ஏற்கெனவே இணைந்து பணியாற்றியிருக்கின்றனர். இந்த பரஸ்பர நட்பின் காரணமாகவே ஜஸ்டினுக்கு இந்த பட வாய்ப்பு அமைந்துள்ளது.

தமிழில் சசிகுமாரின் ‘நாடோடிகள் 2’, அதர்வாவின் ‘ஒத்தைக்கு ஒத்த’, எஸ்.ஜே.சூர்யாவின் பெயரிடப்படாத படம் என கைவசம் படங்கள் உள்ள நேரத்தில், தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுப்பது நமக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

வாழ்த்துக்கள் ப்ரோ ! கலக்குங்க ! உங்க மெலோடிக்கு நாங்க அடிமை.