Sports | விளையாட்டு
மரண பயத்தை காட்டிய இந்திய அதிரடி ஆட்டக்காரர்.. எல்லைக் கோட்டுக்கு அருகே வந்து வழி நடத்திய ஆஸ்திரேலிய பயிற்சியாளர்.!
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிக்கொண்ட கடைசி 20 ஓவர் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தியாவை வீழ்த்தி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. ஆனால் டி 20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நேற்று இந்திய அணிக்கு எதிரான போட்டியின் போது இறுதிக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் செய்த காரியம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
186 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கோலி 85 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
கோலி அவுட் ஆனதும் ஷர்துல் தாகூர் களமிறங்கினார். இவர் வருகையை பார்த்து பதறிப்போன ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பவுண்டரி கோட்டிற்கு அருகே வந்து அணியை வழி நடத்த தொடங்கினார்.
ஷர்துல் தாகூர் பவுலர் என்றாலும் கூட அவர் அதிரடியாக பேட்டிங் செய்ய கூடியவர். இதனால் கடைசி நேரத்தில் அவர் போட்டியை மாற்றிவிடுவார் என்று பயந்து இப்படி ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் நேரடியாக பவுண்டரி லைன் அருகே வந்து அறிவுரை வழங்கினார்.
அதேபோல் நேற்று ஷர்துல் தாகூர் அதிரடியாக ஆடினார். வெறும் 7 பந்துகளில் 17 ரன்களை அடித்து ஆஸ்திரேலிய பேஸ்ட்மேன்களை பதறவிட்டார்.

shardul-thakur-cinemapettai.jpg
