Connect with us
Cinemapettai

Cinemapettai

justin-biebher

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உலகப்புகழ் பாடகர் ஜஸ்டின் பைபர் டுவிட்டரில் பின்பற்றும் ஒரே இந்தியர்.. அதுவும் நம்ம தமிழ் இசையமைப்பாளர்!

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான நபர் பாடகர் ஜஸ்டின் பைபர். உலகளவில் அதிகளவு ரசிகர் பட்டாளங்களை கொண்ட பாப் பாடகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் ரசிகர்களிடம் மிகவும் அன்பாக பழகுவதால் அதுக்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஜஸ்டின் பைபர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுவரை கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேலான நபர்களை பின் தொடர்கிறார்.

உலகம் முழுவதும் இருக்கும் பிரபலங்களில் மிக மிக முக்கியமானவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நம்ம ஊரில் உள்ள சாதாரண ஹீரோக்கள் கூட ரசிகர்களை ட்விட்டரில் பின்பற்ற மாட்டார்கள். ஆனால் உலகமே அறிந்த ஜஸ்டின் பைபர் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

ஜஸ்டின் பைபர் ட்விட்டர் அக்கவுண்ட்டில் அவரது பாலோயர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 113 மில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க ஜஸ்டின் பைபர் இதுவரை இந்தியாவில் எந்த ஒரு பிரபலத்தையும் பின் தொடரவில்லை.

ஜஸ்டின் பைபர் பின்பற்றும் ஒரே ஒரு இந்திய நபர் அதுவும் தமிழ் இசையமைப்பாளர் யார் என்றால் நம்ம ஜிவி பிரகாஷ் தான். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் High&Dry என்ற ஹாலிவுட் ஆல்பம் ஒன்றை வெளியிட்டார்.

இந்த பாடலுக்கு உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகின்றனர். இந்த பாட்டைக் கேட்ட ஜஸ்டின் பைபர் உடனடியாக ஜிவி பிரகாசை டுவிட்டரில் தேடி பின்தொடர்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top