Connect with us
Cinemapettai

Cinemapettai

இரண்டு அப்பாவிகளை கொலை செய்த சாத்தான்கள்.. வெளிவந்த கொடூர ரிப்போர்ட்.. இவளோ மோசமான சைக்கோவா போலீஸ்

sathangulam-police

Tamil Nadu | தமிழ் நாடு

இரண்டு அப்பாவிகளை கொலை செய்த சாத்தான்கள்.. வெளிவந்த கொடூர ரிப்போர்ட்.. இவளோ மோசமான சைக்கோவா போலீஸ்

சாத்தான்குளம், இன்று இந்த பெயரை கேட்டாலே மனசை பதைபதைக்க வைக்கிறது. கொரோனாவை மிஞ்சிய சாத்தான்கள் போலீசாக, இரண்டு உயிர்களை கொலை செய்துள்ளதாக மக்கள் போராடி வருகின்றனர்.

ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று, ஏழு மணியிலிருந்து ஒரு மணிவரை அடித்து துன்புறுத்தி அடித்துள்ளதாக கூறப்படுகிறது.

போலீஸ் தரப்பிலிருந்து உடல்நிலை சரியில்லாமல் இறந்ததாக தெரிவித்துள்ளனர், இதற்கு துணையாக டாக்டர் ஒருவர் ரிப்போர்ட் கொடுத்துள்ளார். ஆனால் சிறைச்சாலையில் சோதனை செய்த மற்றுமொரு டாக்டர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ரிப்போர்ட்டை தெள்ளத் தெளிவாக எழுதி உள்ளார். நக்கீரன் வெளியிட்டுள்ள இந்த ரிப்போர்ட்டை பார்த்தால் நடுநடுங்க செய்கிறது.

dr-report

dr-report

அதாவது பின்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும், ஏதோ ஒரு பொருளை பின்பகுதியில் செலுத்தி மிகக் கொடூரமாக அடித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த ரிப்போர்ட்டில் பையனுக்கு பிரஷர் இருப்பதால் மருந்தும், அப்பாவுக்கு சுகர் இருப்பதால் ட்ரீட்மென்டில் இருப்பது போன்ற குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயராஜின் மனைவி மூன்று முறை ரத்தம் படிந்த உடைகளை எடுத்துச் சென்றுள்ளார்.

அந்த அளவுக்கு கொடூரமாக அடித்துள்ளனர், இந்த கொடூர கொலைக்கு பின்னால் 10 போலீசார்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயராஜ் கடைக்கு அருகில் உள்ளவர் அளித்த பேட்டியில், ஒரு மாதத்திற்கு முன்னர் மொபைல் போன் இலவசமாக கேட்டதாகவும் அதை தர முடியாது என்று கூறியதால் வஞ்சம் வைத்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் சாத்தான்குளம் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு அளவில் இருக்கும் மக்களை பதற வைத்துள்ளது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைக்கு 10 லட்சம் மற்றும் அரசு வேலையை அறிவித்திருப்பது சமூக ஆர்வலர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

நடிகர் சாந்தனு இந்த பிரச்சனையை தல தளபதி ரசிகர்கள், இந்திய அளவில் வெளிக்கொண்டு வரவேண்டும் என்று கூறியதற்காக அவர்கள் #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக் டிரண்ட செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவத்திற்கு பின்னால் இருக்கும் அனைத்து போலீசாரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சாத்தான்குளம் மக்களின் போராட்டத்தின் நோக்கம். அந்தப் போராட்டம் ஜெயிப்பதும் தோற்பதும் முதல்வர் கையில் தான் உள்ளது.

தமிழ்நாடு அரசு உடனடியாக நேரடியாக தலையிட்டு இதனை சரிசெய்தால் மட்டுமே, மக்களுக்கான நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும், அதை விட்டு விட்டு பணத்தை கொடுத்து சரி செய்வது சரியானது அல்ல.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top