Connect with us
boomerang-movie

சும்மா சும்மா என் முகத்தை பார்த்தா போரடிக்கும் – அதனால் இது தான் என் முடிவு

News | செய்திகள்

சும்மா சும்மா என் முகத்தை பார்த்தா போரடிக்கும் – அதனால் இது தான் என் முடிவு

‘விக்ரம் வேதா’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி தற்போது, `சூப்பர் டீலக்ஸ்’, `96′, `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் `சீதக்காதி’, `சயீ ரா நரசிம்ம ரெட்டி’, `மா மனிதன்’, `ஜுங்கா’ உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் `ஜுங்கா’ படத்தை ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து `இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாரீஸில்  தொடங்கிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, தொடர்ந்து 30 நாட்கள் நடக்க இருந்தது.

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்கு இசையமைத்த சித்தார்த் விபின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இந்த படத்தை விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ஏ&பி குரூப்ஸ் கைப்பற்றியிருக்கிறது.

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் தான் `இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதே நாளில் `ஜுங்கா’ படத்தின் படப்பிடிப்புயும் இயக்குநர் கோகுல் தொடங்கி இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

vijaysethupathi

முன்னணி நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். இதனால் அவர்களது ரசிகர்கள் அந்த படங்களை அதிகமாக எதிர்பார்ப்பதோடு பெரிய ஓப்பனிங்கையும் கொடுத்து வருகிறார்கள்.

ஆனால், தற்போது முன்னணி நடிகராக விட்ட விஜய் சேதுபதி வருடத்திற்கு நான்கைந்து படங்களை கொடுத்து விடுகிறார். அதோடு, அவர் கெஸ்ட் ரோலில் நடித்த சில படங்களும் வெளியாகி விடுகிறது.

இதுகுறித்து விஜயசேதுபதி கூறுகையில், எனக்கும் என் படம் எப்போது வரும் என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது.Vijaysethupathi_Bollywood

ஆனால், நட்பு வட்டார டைரக்டர்களின் அன்புக்கு இணங்க பல படங்களில் நடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு வருகிறது.என்றாலும், இந்த நிலையை இனிமேல் தொடர விடமாட்டேன்.

காரணம், என் முகத்தை அடிக்கடி பார்த்தால் ரசிகர்களுக்கு போரடித்து விடும். ஏனென்றால் நான் சுமார் மூஞ்சி குமாரு என்பது எனக்குத் தெரியும். அதனால் இனிமேல் நானும் பட எண்ணிக்கையை குறைத்து ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கப்போகிறேன் என்கிறார் விஜய் சேதுபதி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top