fbpx
Connect with us

Cinemapettai

சேவாக் மட்டுமில்லீங்க, ஹர்பஜன் சிங்கும் ட்விட்டரில் சூப்பர் ஸ்டார் தான்.

News | செய்திகள்

சேவாக் மட்டுமில்லீங்க, ஹர்பஜன் சிங்கும் ட்விட்டரில் சூப்பர் ஸ்டார் தான்.

விரேந்தர் சேவாக் தன் ஓய்விற்கு பின் எடுத்துள்ளதோ பல அவதாரங்கள், ஹிந்தியில் வர்ணனையாளர், ஐபில் பஞ்சாப் அணியின் கோச், விளம்பரங்களில் நடிப்பது, தன் ஸ்கூலின் முழு நிர்வாகப்பொறுப்பை மேற்கொள்வது, என்று மனிதர் ஏக பிஸி. இவ்வளவு பிஸியிலும் மனிதர் தன் ட்விட்டரில் ஆக்ட்டிவாகவே இருப்பார். இவருக்கு 12 .7  மில்லியன் பாலோயர்ஸ் உண்டு. சக வீரர்களை கலாய்க்கும் விதமாக பிறந்தநாள் வாழ்த்து கூறுவது, அரசியல் அல்லது பொது பிரச்னையை நக்கல் அடிப்பது என்று சுவாரசியமாக இருக்கும் இவர் த்விட்டேர் பக்கம். அதிலும் இங்கிலாந்தின் பியர்ஸ் மோர்கன் என்பவரை வைச்சு செய்வார் மனிதர். இது அனைத்தும் நாம் அறிந்த செய்தியே.

சரி இப்ப நம்ம டாப்பிக்குக்கு வருவோம், அதாங்க ஹர்பஜன் சிங். இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப் பட்டாலும் மனிதர் இன்னமும் தன் ஒய்வு பற்றி எதுவும் முடிவு எடுக்கவில்லை. ஐபில் போட்டிகளில் ஆடுவது, தன்னுடைய ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனியை ப்ரோமோட் செய்வது, தன் மனைவி கீதா பஸ்ராவுடன் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது என்று பரபரப்பாகவே இருப்பவர்.

ஸ்பின் பௌலிங்கில் கிங்காக இருந்தாலும் மனிதர் ட்விட்டரை பொறுத்தவரை கத்துக்குட்டி என்று தான் சொல்ல வேண்டும். 5 . 66  மில்லியன் பாலோயர்ஸ் உள்ளனர் இவருக்கு. இந்த மாதத்தில் இவர் ட்விட்டரில் அதிகம் லைக், ரீ ட்வீட்   செய்யப்பட்ட சில டீவீட்டுகளை நாம் இங்கு பார்ப்போம்.

“வணக்கம் பாலாஜி. இந்த முத்தான மனிதருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இவர் சிரிப்புக்கு ஈடு இணை கிடையாது.”

 

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைகேல் கிளார்க்கை” நண்பா நீ உன் ஓய்வில் இருந்து வெளிவந்து உங்கள் அணிக்காக மீண்டும் விளையாடவேண்டும். ஆஸ்திரேலிய அணி தலை சிறந்த பாட்டர்களை உருவாக்கிய காலம் இப்போ மலை ஏறிவிட்டது. தற்போழுது பேட்டிங்கில் அந்த திறன் இல்லை.

குலதீப் யாதவின் ஹாட்ரிக் பாராட்டும் விதமாக-

“ஈடன் கார்டன் கிரௌண்டுக்கு நன்றி.”

இவர் தற்போழுது அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை கலாய்த்தது தான் மாஸ்டர் பீஸ்.

“ஹோட்டலில் டின்னர் முடித்துவிட்டு, பில் கொடுக்கும் பொழுது, மத்திய மற்றும் மாநில அரசு நம்முடன் சேர்ந்து உணவு சாப்பிட்டமாதிரி தோணுது.”

10 வருடங்கள் உருண்டோடி விட்டது, டி 20 உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்காவில்  வென்று. எனினும் நேற்று தான் நடந்தது போல் மனதில் தோன்றுகிறது. நன்றி பிசிசிஐ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top