Tamil Cinema News | சினிமா செய்திகள்
38 வயது தானே! பொறுத்து திருமணம் செய்து கொள்கிறேன்- பிரபல நடிகை
விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வந்த தகவலுக்கு பெரிய முற்றுப்புள்ளியை வைத்து இருக்கிறார் நடிகை கௌசல்யா. மலையாள டைரக்டர் பாலசந்திர மேனன் இயக்கத்தில் ‘ஏப்ரல் 19’ என்னும் படத்தில் ஹீரோயினா அறிமுகமானவர் கௌசல்யா. அதை தொடர்ந்து, அடுத்த வருடமே தமிழ் சினிமாவில் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் அறிமுகமானார். இரண்டு படங்களுமே வெற்றி என்பதால் இவரின் கேரியர் வெகுவாக ஏற்றம் கண்டது. தமிழ், மலையாளத்தில் பல வாய்ப்புகளை பெற்றார்.
சினிமாவில் சில நாயகிகளுக்கு வயதாக வயதாக வாய்ப்புகள் குறையும் என்பதை போல கௌசல்யாவிற்கும் குறைந்தது. இதை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் அண்ணி, அக்கா வாய்ப்புகளை செய்து வந்தார். சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வருகிறார். காதல், திருமணம் என வதந்திகள் எதிலும் சிக்காமல் வலம் வருகிறார்.
தற்போது, 38 வயதாகும் இவர் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டதாகவும், பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் இறங்கி இருப்பதாகவும் கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. இந்நிலையில், இத்தகவல் உண்மையெல்லாம் இல்லை என நடிகை கௌசல்யா மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து, தனது சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து இருக்கும் கௌசல்யா, ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சமூக பேச்சில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு 38 வயசு தான் ஆகுது. இன்னும் ஒரு சில வருடங்கள் பேச்சுலரா இருக்கவே ஆசைப்படுறேன்.
பேச்சுலராக இருக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி திருமணத்தில் இல்லை என நினைக்கிறேன். கல்யாணம் பிடிக்காது என்றெல்லாம் இல்லை. எனக்கு திருமணம் செய்ய நேரம் வந்து விட்டது என தோணும் அப்போது கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

kausalya
தற்போது, தெலுங்கு படம் ஒன்றில் நாக சைதன்யாவின் அம்மாவாக நடிக்கும் கௌசல்யா, சினிமாவில் இதுவும் சகஜம் எனத் தெரிவித்து இருக்கிறார். மேலும், தற்போது எனக்கு சினிமா மட்டுமே போதும் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
