Hollywood | ஹாலிவுட்
ஜுராசிக் வேர்ல்ட் – ஃபாலன் கிங்டம்’ திரை விமர்சனம்

ஜுராஸிக் பார்க் படங்களின் ஐந்தாம் பாகமும் வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படம் 2015 இல் வெளியான ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் தொடர்ச்சி. பல நாட்களாகவே ப்ரொடக்ஷனில் இருந்த படம். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ளது.
விட்ட இடத்தில் இருந்தே துவங்குகிறது படம். அரசு தலையிட்டு அந்த தீவில் இருக்கும் மிருகங்களுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றி விட்டனர். எரிமலை வெடிக்க தயாராக இருப்பதால் அந்த இனமே அழிந்துவிடும் என்ற சூழ்நிலையில் உள்ளது.
முன்னால் ஜுராசிக் பார்க்கின் காப்பாளர், இப்பொழுது அந்த இனத்தை காக்க வேண்டும் என்று போராடி வந்தார். அப்பொழுது அவருக்கு முந்தய ஓனரின் பார்ட்னரிடம் இருந்து போன் வருகிறது. அணைத்து வகை மிருகத்திலும் ஒரு வகையை எடுத்துக்கொண்டு போய் சரணாலயத்தில் வைக்கும் மிஷனை இவருக்கு தருகிறார். தன் டீம்முடன் புறப்படுகின்றனர்.
எனினும் அவர் ஹீரோயினிடம் பொய் தான் சொன்னார் என்பது பின்னரே புரியவருகிறது. பல அமிலி துமிலி, சேசிங் என்று நகர்கிறது முதல் பாதி. டைனோசர்களை ஏலம் விடுவதே அவரின் நோக்கம். அதுமட்டுமன்றி ஜெனெடிக் மாற்றம் செய்யப்பட்ட மிருகத்தையும் வைத்துள்ளார். நம் ஹீரோ – ஹீரோயின் டீம் முன்னால் ஓனரின் தத்து பேத்தி மூவரும் சேர்ந்த அவரை எவ்வாறு தடுக்கிறார்கள், இறுதியில் டைனோசர் பிழைத்ததா இல்லையா என்பதே மீதி கதை.
பிளஸ் – பேத்தி கதாபாத்திரம், இசை, செண்டிமெண்ட் பகுதி
மைனஸ் – சுமாரான கிராபிக்ஸ், எளிதில் யூகிக்கக்கூடிய திரைக்கதை
சினிமாபேட்டை அலசல்
நீண்ட இடைவெளிக்கு பின் இப்பாகம் வருவதால், எதிர்பார்ப்பு லெவல் மிக அதிகம். அனால் இப்படம் அதனை பூர்த்தி செய்யவில்லை. இரண்டு விதமான டைனோசர்களை மோதவிட்டு கிளைமாக்ஸ் முடிப்பதெல்லாம் நம் பிரபு சாலமன் அவர்களே கும்கி படத்தில் உபயோகப்படுத்திய அரத பழசான லாஜிக். எனினும் அந்த பேத்தி கதாபாத்திரம் தான் பிளஸ். மற்றவர்களுக்கு ரோல் கம்மி தான்.
சினிமாபேட்டை ரேட்டிங் : 2.5 / 5
அடுத்த பார்ட்
இப்படத்தின் கடைசி பாகம் ஜூன் 2021 இல் வருகிறது. அதற்க்கான கட்சிகளின் முன்னோட்டம் போல் காமித்துள்ளனர். மேலும் மனிதர்கள் டைனோசர்களுடன் இணைந்து வாழும் சூழல் உருவாகும் என்றும் சஸ்பென்ஸ் வைத்துள்ளனர். அதுமட்டுமன்றி ஏலத்தில் எடுத்து சென்ற மிருங்கங்களை என்ன செய்யவார்கள், காட்டினுள் தப்பிய மிருகங்கள் ஏதுவாகும் என கடைசி பார்ட்டுக்கான பில்ட் – அப் செமையாக உள்ளது.
