ஒரு படம் என்றால் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குனர் குறித்து தான் அனைவரும் பெரும்பாலும் தெரிந்து கொள்வர். ஆனால், ஜூனியர் ஆர்டிஸ்டுகள் குறித்து எத்தனை பேருக்கு தெரியும்?.

ஜூனியர் ஆர்டிஸ்டுகள் இவர்கள் இல்லை என்றால் பெரும்பாலான நடிகர் நடிகைகளுக்கு  சிக்கல் தான். சினிமாவில் பெரிய ஆட்களாக வேண்டும் என்பதே இவர்களின் ஆசை. ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது தெரியுமா?

இவர்களுடையை தொடர்பு சினிமா மேனேஜர் மற்றும் பி.ஆர்.ஓக்களுடன் மட்டும் தான். இவர்களை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்வது பி.ஆர்.ஓக்கள் தான். ஒரு சீனில் நடிக்க இவ்வளவு தருகிறோம் என்று கூறி அழைத்து செல்வர்.

அதிகம் படித்தவை:  குஜராத் பவுலர்களை வைத்து பேட்டிங் பழகிய நரைன் : பவுண்டரியில் புது சாதனை!

பின்னர், ஷூட்டிங் முடிந்து பணத்தை கேட்டால், பெரும்பாலான நேரங்களில் இவர்களுக்கு பணம் தரப்படுவதில்லை. இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

குடும்ப நிலைமையை கருத்தில் கொண்டு சினிமாவுக்கு நடிக்க வரும் பெண்கள் இருக்கும் சூழ்நிலையில், சிலர் பணத்திற்காக நடிக்க வருவதால், பெண்கள் என்றாலே அதற்கு தான் என்று முத்திரை குத்திவிடுகின்றனர் சினிமா துறையில்.

அப்படி நடிக்க வரும் பெண்களிடம் ஷூட்டிங் முடிந்தவுடன் பேசிய பணத்தை விட அதிகமாக தருகிறோம், இரண்டு, மூன்று மணி நேரம் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள் சினிமா துறையில் உள்ள பெரிய தலைகள்.

அதிகம் படித்தவை:  இந்தியன் படத்திற்காக அனிருத்திடம் ஷங்கர் வைத்த கோரிக்கை

அவர்களும், பணத்தாசையில் எதற்கும் தயங்காமல் சரி என்று ஒப்பு கொள்கின்றனர். தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இவர்களை தாங்கள் இச்சைகளுக்கு பலி ஆக்குகின்றனர்.

இவ்வாறு உடலாலும், மனதாலும் கஷ்டப்படும் ஜூனியர் ஆட்டிஸ்டுகளும் மனிதர்கள் தான் என்பதை பலர் புரிந்து நடந்து கொண்டால், அவர்களும் மரியாதையாக வாழ முடியும்.