Connect with us
boomerang-movie

சயீஷாவைப் புகழ்ந்து தள்ளும் ஜூங்கா இயக்குநர்…. காரணம் தெரியுமா?

Sayyeshaa

News | செய்திகள்

சயீஷாவைப் புகழ்ந்து தள்ளும் ஜூங்கா இயக்குநர்…. காரணம் தெரியுமா?

சயீஷாவைப் புகழ்ந்து தள்ளும் ஜூங்கா இயக்குநர்…. காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் கதாபாத்திரத் தேர்வு மூலமும், நடிப்பு மூலம் கவனம் ஈர்த்த நடிப்பு ராட்சசன் விஜய் சேதுபதி படம் என்றாலே பல்வேறு தரப்பு ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெறும். கலவையான கதாபாத்திரத் தேர்வு, வெரைட்டியான நடிப்பு என ரசிகனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் உன்னத நடிகன் விஜய் சேதுபதி நடிப்பில் ஜூங்கா படம் வெளியீட்டுக்குத் தயாராகி இருக்கிறது. கோகுல், விஜய் சேதுபதி கூட்டணியில் வெளிவந்த ’இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இந்த கூட்டணி தற்போது இணைந்து இருக்கும் படம் ஜுங்கா. சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார். விஜய் சேதுபதியின் நாயகிகளாக சயீஷா மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்துள்ளனர்.

junga

junga

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வித்தியாசமான கதாபாத்திரம் எனக் கூறப்படுகிறது. ‘பாரீஸ் டு பாரீஸ்’ என்பது தான் படத்தின் ஒன்லைன். கதைப்படி, நாயகன் விஜய் சேதுபதி கஞ்சத்தனம் மிக்க ஒரு டான். அவரது உதவியாளர் யோகிபாபு. இருவரும், பழிவாங்கும் படலத்துக்காக பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸூக்கு விமானத்தில் செல்கின்றனர். பின்னர் அங்கு நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்புக் கிடைத்திருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. லோக்கல் டான் ஆக இருக்கும் விஜய் சேதுபதி இன்டர்நேஷனல் டான் ஆக மாறி, பிரான்ஸில் தனி ராஜ்ஜியம் நடத்துவது போல் கதைக்களம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

junga

junga

நடிகை சயீஷா கடினமான சூழல்களில் நடித்துக் கொடுத்திருப்பதாக இயக்குநர் கோகுல் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். சயீஷா குறித்து பேசிய கோகுல், ரஷ்யாவில் கடுங்குளிரான பகுதிகளில் ஷூட் செய்து கொண்டிருந்தோம். கடுங்குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த சயீஷா, திடீரென மயக்கமடைந்துவிட்டார். இதனால், நான் உள்பட படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துவிட்டோம். உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். அவரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ஆம்புலன்ஸ் புறப்பட்ட சிறிதுநேரத்திலேயே மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குத் திரும்ப வந்தது. மயக்கம் தெளிந்து அதிலிருந்து இறங்கிய சயீஷா, இன்னும் 4 ஷாட்கள்தானே இருக்கிறது. சிறிதுநேரம் ஹீட்டர் முன் நின்று விட்டு நான் நடித்து முடித்துவிடுகிறேன் என்று கூறினார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்புணர்வுடன் அவர் ஜூங்கா படத்தில் உழைத்தார் என பாராட்டித் தள்ளியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top