Connect with us

Cinemapettai

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த ஜீ தமிழ்- சரிகமப நிகழ்ச்சி போட்டியாளர்

vijay-sethupathy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த ஜீ தமிழ்- சரிகமப நிகழ்ச்சி போட்டியாளர்

ஜூங்கா

‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி மீண்டும் இயக்குனர் கோகுலுடன் இணையும் படம் தான் ” ஜூங்கா “. படத்தின் கதை பிடித்து போகவே நடிப்பதும் மட்டும் இன்றி இப்படத்தை தயாரிப்பதும் விஜய் சேதுபதியே. ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார். டட்லி ஒளிப்பதிவு. சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். மேலும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து வருகிறார்.

‘ராக்ஸ்டார்’ ரமணியம்மாள்

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த இந்த ராக் ஸ்டார் ரமணியம்மாள் பிறந்தது 1954 ஆம் வருடம். தற்போது 64 வயதாகும் ரமணியம்மாள் படித்தது அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி. அவருக்குப் படிப்பில் ஆர்வம் இருந்தும், குடும்பச் சூழல் காரணமாக படிப்பைத் தொடரமுடியாமல் வீட்டு வேலை செய்து குடும்பம் நடத்த வேண்டியதாகி விட்டது. இந்த வயதிலும் பல மைல் தூரம் நடந்து வந்து வீட்டு வேலைகள் செய்யும் ரமணியம்மாளுக்கு ஒரு நிமிடம் கூட சோம்பி உட்காரப் பிடிக்காதாம். எல்லா நேரங்களுலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கவே தனக்கு மிகவும் விருப்பம் என்கிறார்கள். ரமணியம்மாளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களது உதவியுடன் தான் தனது 63 வது வயதில் ஜீ தமிழின், சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

2013 ஆம் ஆண்டில் விஜய் ஆண்டனி இசையில் வெளிவந்த “ஹரிதாஸ்” திரைப்படத்தில் வெள்ளைக்குதிரை என்றொரு பாடலைப் பாடியிருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது மீண்டும் இவர் விஜய் சேதுபதி படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். இத்தனை சித்தார்த் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“கனவுகளை நோக்கி பயணிப்பவர்களுக்கு வயது முட்டுக்கட்டை ஆக இருக்கக்கூடாது என்பதுக்கு இவர் தான் உதாரணம்” என்றும் அதில் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top