Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜூங்கா படம் எப்படி இருக்கு ? ட்விட்டர் திரை விமர்சனம்.
Published on

‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி மீண்டும் இயக்குனர் கோகுலுடன் இணையும் படம் தான் ஜூங்கா. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். யோகி பாபு காமெடியில் கலக்கியுள்ளார். டட்லி ஒளிப்பதிவு. சாபு ஜோசப் எடிட்டர். இப்படத்துக்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார்.
நடிப்பதோடு மட்டுமன்றி படத்தை தயாரித்தும் உள்ளார் விஜய். மேலும் பட ப்ரோமோஷன் வேலைகளிலும் மிகவும் ஈடுபாடுடன் உள்ளார் சேதுபதி. இந்நிலையில் படத்தின் வெளிநாட்டு பிரிமியர் பார்த்தவர்கள் படம் சூப்பர் என்றே சொல்லியுள்ளனர். டார்க் காமெடி ஜானரில் அசத்தி விட்டதாம் இந்த டீம்.
