Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் நாள் வசூலில் தெறிக்கவிட்ட ஜூங்கா.! வசூல் விவரம் இதோ.!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கோகுல் இயக்கத்தில் நேற்று மாஸாக வெளியாகிய திரைப்படம் ஜூங்கா இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு எகிறி கிடந்தது, இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வித்யாசமான கெட்டப்பில் நடித்துள்ளார்.
நேற்று திரைக்கு வந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது கொஞ்சம் மாறுபட்ட கதை கெட்டப் என்பதால் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது, படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோன செபாஸ்டின் நடித்துள்ளார் மேலும் சயிஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தின் சென்னை வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது ஜூங்கா சென்னையில் மட்டும் முதல் நாள் 51 லட்சம் வரை வசூல் ஆகியுள்ளது மேலும் தமிழ்நாட்டில் வசூல் அதிகமாக இருக்கும் என கூறபடுகிறது மேலும் இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் வசூல் அதிகமாக இருக்கும் என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
