Tamil Cinema News | சினிமா செய்திகள்
வித்தியாசமான முறையில் நடந்த ஜுங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஜுங்கா படத்தின் இசை வெளியீட்டு விழாவை அப்படக்குழு வித்தியாசமாக நடத்தி இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கோகுல், விஜய் சேதுபதி கூட்டணியில் வெளிவந்த ’இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் பெரும் வரவேற்பாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து இக்கூட்டணி தற்போது இணைந்து இருக்கும் படம் ஜுங்கா. சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார். விஜய் சேதுபதியின் நாயகிகளாக சாயிஷா சைகல், மடோனா செபஸ்டியன் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வித்தியாசமான கதாபாத்திரம் எனக் கூறப்படுகிறது.
‘பாரீஸ் டு பாரீஸ்’ என்பது தான் படத்தின் ஒன்லைன். கதைப்படி, நாயகன் விஜய் சேதுபதி கஞ்சத்தனம் மிக்க ஒரு டான். அவரது உதவியாளர் யோகிபாபு. இருவரும், பழிவாங்கும் படலத்துக்காக பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசுக்கு விமானத்தில் செல்கின்றனர். அங்கு சாப்பிட விஜயின் தாய் சரண்யா பொன்வண்ணன் புளியோதரை கொடுத்து அனுப்புகிறார். அதை இருவரும் சாப்பிடும் போது பக்கத்தில் இருப்பவர்களுக்கு, பகிர்ந்து கொடுக்கிறார். இதனால், விமானத்தில் புளியோதரை பேமஸாக மாறுகிறது.
அங்கு கஞ்சனான டான், செய்யும் அடடே பிசினஸே படத்தின் பின்னணியாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில், படக்குழுவினருடன் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அனைவரும் வேஷ்டி, ஜிப்பா அணிந்திருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதிலும், விஜய் சேதுபதி ஸ்டைலாக வேட்டி, ஜிப்பாவில் அனைவருடன் எடுத்துக் கொண்டிருந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொகுப்பாளினி பிரியங்காவும் அதேப்போல எண்ட்ரி கொடுத்து இருப்பதும் ட்ரெண்ட்டாகி இருக்கிறது.
