விக்ரம் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘இருமுகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கி முடிவடைந்துள்ளது. தற்போது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கவுள்ளனர்.

இப்படத்திற்கு பிறகு விக்ரம், ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய திரு இயக்கத்தில் ‘கருடா’ என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்தில் தொடங்கவிருக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, காஜல் அகர்வால், விக்ரம் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘இருமுகன்’ படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், கால்ஷீட் பிரச்சினையால் இதில் நடிக்க முடியாமல் போனது. அதன்பின்னர், ‘கருடா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.