Connect with us

Cinemapettai

காமெடி கலாட்டா கொண்டாட்டம்.. ஜுமான்ஜி திரைவிமர்சனம்

Reviews | விமர்சனங்கள்

காமெடி கலாட்டா கொண்டாட்டம்.. ஜுமான்ஜி திரைவிமர்சனம்

JUMANJI: THE NEXT LEVEL

ஜுமான்ஜி பட வரிசையில் வெளியாகும் நான்காவது படம். 1995 இல் வெளியானது முதல் பாகம். அதன் நேரடி இரண்டாம் பாகமாக 2017 இல் Jumanji: Welcome to the Jungle வெளியானது. தற்பொழுது மூன்றாம் பாகம் ரிலீஸ் ஆகியுள்ளது. 90ஸ் கிட்ஸின் பாவரிட் படமான ஜுமான்ஜி இன்றையை ரசிகர்களை கவர்ந்ததா இல்லையா என வாங்க பார்ப்போம் …

கதை – சென்ற பார்ட்டிலேயே போர்டு கேம் டு வீடியோ கேம் அவதாரம் எடுத்துவிட்டனர். விட்டதன் தொடர்ச்சியாகவே ஆரம்பம் ஆகிறது. நண்பர்கள் நால்வரும் சந்திக்க முடிவெடுக்கின்றனர். எனினும் மார்தா, பெத்தனி, பிரிட்ஜ் வந்துவிட ஸ்பென்சர் வரவில்லை. எனவே அவன் வீட்டுக்கு செல்கின்றனர். அங்கு சென்ற பின் தான் ஸ்பென்சர் மீண்டும் கேமினுல் நுழைந்தது தெரியவருகின்றது. இவர்களும் உள்நுழைய கூடவே ஸ்பென்சரின் தாத்தா மற்றும் அவரின் நண்பர் மிலோவும் கேம்மில் வந்து சேர்கின்றனர். பெத்தனி மட்டும் வெளியே.

இம்முறை கேமின் ரோல்கள் மாத்தி மாத்தி வந்து விடுகிறது. அதில் சில குழப்பங்கள். ஜுமான்ஜி காடு பாலை வானம் ஆகிறது. சக்தி வாய்ந்த கல் ஒன்றை வில்லன் ஜூர்ஜென் எடுத்து மறைக்கிறான். அந்த கல்லை எடுத்து சூர்யன் முன் காட்டுவதே டாஸ்க். எனினும் இதில் ஒருவரை இழக்க நேரிடும் என்பதனால் பயம் கலந்த ஆரவாரம் ஆரம்பம் ஆகிறது. என்ன வடிவில் ஸ்பென்சர் இருந்தான், பெத்தனி ஆட்டத்தின் உள்ளே வரமுடிந்ததா, எப்படி வெற்றி பெற்றனர், யாரை இழக்க நேர்ந்தது என்பதுடன் முடிகிறது படம்.

சினிமாபேட்டை அலசல் – ஒன் லயன் தான் கதை, எனினும் திரைக்கதை மற்றும் மேக்கிங் வாயிலாக நம்மை வழக்கம் போல கவர்கிறது இந்த டீம். ஆரம்பத்தில் இரண்டு தாத்தாக்களின் அம்மாஞ்சித்தனமான பேச்சு, பின்னர் அவர்களின் பார்வையில் மனித வாழக்கை எப்படி என உணர்த்திய இயக்குனருக்கு ஸ்பெஷல் க்ளாப்ஸ். அதுமட்டுமன்றி நிஜ வாழ்க்கையில் உள்ள குறைகளை மறக்க கேம் வரும் ஸ்பென்சர், வாயிலாக இன்றையை இளசுகளுக்கு கமர்ஷியல் அம்சத்துடன், தன்னம்பிக்கையும் கொடுத்துள்ளனர் இந்த டீம்.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – பொழுதுபோக்கு அம்சத்துடன் நல்ல பீல் கூட மூவி இந்த ஜுமான்ஜி. இது அடுத்த லெவல் ஜுமான்ஜி தான். அடுத்தப்பாக்கத்தில் கேம் உள்ள இவர்கள் செல்லமால், முதல் பார்ட் போல மிருகங்கள் நம் ஊருக்குள் வருவதே போல முடித்து, இப்பவே நாம் ஆர்வத்தை அதிகரிக்கிறது.

சினிமாபேட்டை ரேட்டிங் – 3.5 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top