Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்வதேச பிரச்சனைக்காக புகைப்படம் வெளியிட்ட ஜுலி.. இந்த விசித்திரமான சந்துவை எங்க புடிச்சீங்க என கலாய்த்த ரசிகர்கள்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட ஜூலி மிகவும் பிரபலம் ஆனார்.இதனால் இவரை விஜய் டிவி பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி வாயிலாக சின்ன திரையில் அறிமுகப்படுத்தியது.
அங்கு அவர் செய்த சில காரியங்களால் மக்களிடம் அதிகமாக வெறுப்பை சம்பாதித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி என்றாலே போலி என சொல்லும் அளவிற்கு நிலை உண்டானது.
பின்னர் தொகுப்பாளினி,விளம்பர படங்கள், ஒரு சில சினிமா பட வாய்ப்புகள் என பிஸியாக மாறினார் ஜூலி. இந்நிலையில் சர்வதேச அளவில் உள்ள பிரச்சனை நிறத்தால் மனிதர்களை ஊதுக்குவது, ஊதாசீனப்படுத்துவது. சில மரணங்கள் கூட நிகழ்ந்துள்ளது. black lives matter என பலரும் கோஷம் போட்டு வருகின்றனர் உலகளவில்.
இதனை மையப்படுத்தி வித்தியாசமான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் ஜூலி. கருப்பு இனத்தவரை ஆதரிக்கும் வண்ணம் கருப்பு நிற மேக்கப் போட்டு போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார்.

big boss julie
இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் ஜூலியின் இந்த முயற்சியை பாராட்டி வருகின்றனர். ஆனால் எப்பொழுதும் போல விதண்டாவாதம் பேசும் சிலர். “ஏன்மா கீழ்த்தட்டு மக்கள் பற்றி பேச மாட்டியா? கறுப்பர்கள் தான் முக்கியமா ? ” எனவும் கேள்வி கேட்கின்றனர்.

big boss julie
தூற்றுவோர் தூற்றட்டும், போற்றுவோர் போற்றட்டும், நீங்க கலக்குங்க ஜூலி.
