Tamil Cinema News | சினிமா செய்திகள்
காதுல ரத்தம் வருது விட்டு விடுங்க ‘ஜூலி’- இந்த பாடலை நீங்களே கேட்டு பாருங்க!
ஜல்லிக்கட்டில் வீர தமிழச்சி என பெயர் எடுத்தவர் தான் ஜூலி ஆனால் அந்த பெயர் ரொம்ப நாள் நிலைக்கவில்லை ஜல்லிக்கட்டில் பிரபலமானதால் இவரை விஜய் தொலைகாட்சி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள்.
பின்பு இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கலைஞர் தொலைகாட்ச்சியில் தொகுப்பாளினி வாய்ப்பு கிடைத்தது அதுவும் கலா மாஸ்டரால் இப்பொழுது கலைஞர் தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் விமல் தயாரித்து, நடித்த ‘மன்னர் வகையறா’ படத்தில் கெஸ்ட் ரோலில் தலைகாட்டிய ஜூலி. அடுத்து ‘உத்தமி’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும், அப்பள விளம்பரத்தில் ஆட்டோமொபைல் ஆயில் விளம்பரத்தில் நடித்துள்ளார்.
தற்போது கலைஞர் டீவியில் ஒளிபரப்பாகி கொண்டடிருக்கும் ‘ஓடி விளையாடு பாபா’ நிகழ்ச்சியை தொகுப்பாளினியாக தொகுத்து வழங்கி வருகிறார் ஜூலி.
அந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் சேட்டைகள் அளவிடமுடியாது சமீபத்தில் நடனம், பாடல் என்று இவர் பல செயல்கள் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் அந்த நிகழ்ச்சியில் குரு படத்தில் ‘நான் முத்தம் தின்பவள்’ என்ற பாடலை ஜூலி பாடியுள்ளார். இந்த பாடலை பாடிய ஜூலியை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

julie
இதில் ஒரு ரசிகர் ‘காதுல ரத்தம் வருது விட்டு விடுங்க’ என்று பதிவிட்டு உள்ளார், பலர் எதிர் மறையான கருத்துகளும். சிலர் சூப்பர் என்றும் கூறிவருகின்றனர். இதை நீங்கள் கேக்கமா இருந்தால், இந்த பாடலை கேட்டு comment பண்ணுக.
