Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜூலி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளே.!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மிகவும் பிரபலமானவர் ஜூலி இந்த போராட்டத்தின் மூலம் இவருக்கு வீரதமிழச்சி என பெயர் கிடைத்தது, அதேபோல் அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார் ஆனால் அந்த இடம் நிலையாக இருக்கவில்லை.

julie
போராட்டத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்ற ஜூலிக்கு விஜய் டிவி மூலம் அதிர்ஷ்டம் அடித்தது, ஆம் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது, அதில் கலந்து கொண்ட ஜூலி தனக்கு கிடைத்த நல்ல பெயரை கெடுத்துக்கொண்டார்.

Julie
இந்த நிகழ்ச்சி மூலம் அனைவரின் வெறுப்பை சம்பாதித்தார் பல ரசிகர்கள் பயங்கரமாக விமர்ச்சனம் செய்தார்கள், இவரை பொய் சொல்கிறார் என கூறினார்கள், அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார்.
தற்பொழுது இவர் பிரபல தொலைகாட்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் இவருக்கு பட வாய்ப்புகளும் வருகிறது இவர் உத்தமி என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
My official first look on #AnithaMBBS. Thanks for all ur supports and prayers pic.twitter.com/yYvFHVUwjw
— எம் ஜூலி (M JULEE) (@lianajohn28) March 5, 2018
அதுமட்டும் இல்லாமல் தற்பொழுது ஜூலி இறந்து போன மாணவி அனிதா வாழ்க்கை படமாக எடுக்க இருப்பதாகவும் அதில் ஜூலி நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இதை ஜூலியே தனது டிவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.ஆனால் இன்று அனிதாவின் பிறந்தநாள்.
