fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஓ சொல்றியா மாமா பாட்டுக்கு கிளாமர் ஆட்டம் போட்ட ஜூலி.. வைரல் வீடியோ

Julie-Cinemapettai.jpg

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஓ சொல்றியா மாமா பாட்டுக்கு கிளாமர் ஆட்டம் போட்ட ஜூலி.. வைரல் வீடியோ

அல்லு அர்ஜுன் நடிப்பில் ஐந்து மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்து வரும் திரைப்படம் புஷ்பா. அவரது சினிமா கேரியரில் இந்த படம் மாபெரும் வசூலை குவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக முதல் முறையாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சி ஒன்று படு ஆபாசமாக இருந்ததால் அதற்கு கண்டனங்கள் எழுந்தன.

இது ஒருபுறமிருக்க உண்மையாலுமே புஷ்பா படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெறுவதற்கு சமந்தா தான் காரணம் என்று சொன்னால் மிகையாகாது. சமந்தா அப்படி என்ன பண்ணிட்டாங்க அப்படின்னு தானே கேக்குறீங்க.

ஜூலியின் வைரல் வீடியோ

விசயமே அங்கதான் இருக்கு. சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் வைரலாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இப்போது இந்த வீடியோ பாடல் வெளியாகும் என ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

இப்படிப்பட்ட ட்ரெண்டிங் பாடலை நம்ம வீரத்தமிழச்சி ஜூலி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ்ஸ் போட்டு ரசிகர்களை குதூகலப் படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இப்போதுதான் ஜூலிக்கும் அவரது காதலிக்கும் இடையே வாக்குவாதம் முற்றி இருவரும் போலீஸ் ஸ்டேஷன் சென்று ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் இப்படி ஒரு வீடியோ போட்டது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கண்டன்ட் கொடுக்கும் விதமாக அமைந்துவிட்டது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top