fbpx
Connect with us

Cinemapettai

ஜூலியை இப்படி அசிங்கப்படுத்திய குழந்தை.!கதறி கதறி அழுத ஜூலி.! அப்படி என்ன கேட்டது குழந்தை தெரியுமா ?

News | செய்திகள்

ஜூலியை இப்படி அசிங்கப்படுத்திய குழந்தை.!கதறி கதறி அழுத ஜூலி.! அப்படி என்ன கேட்டது குழந்தை தெரியுமா ?

தமிழகத்தில் மிகப்பொிய அதிா்வை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ் பெற்றவா் ஜூலி. செவிலியரான இவா் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். 19 போ் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் ஜூலி மட்டுமே சினிமா பின்புலம் இல்லாதவா்.

ஆரம்பத்தில் எல்லோருடனும் கலகலப்பாக பேசிய ஜூலி நாளடைவில் பொய் பேசுகிறாா், நடிக்கிறாா் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பாா்த்தவா்கள் மட்டுமல்லாது அந்த வீட்டுக்குள் இருந்தவா்களுக்கே அது தெரியவந்தது. அதுவும் குறிப்பாக ஓவியா விஷயத்தில் ஜூலி நடந்து கொண்ட விதம் யாருக்குமே பிடிக்கவில்லை.

juli

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் கிடைத்த அந்த நல்ல பெயரை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரால் தக்க வைக்க முடியவில்லை. இதன் காரணமாக முதலில் அவரை ஆதரித்தவர்கள் கூட ஜூலி என்றாலே கடுப்பாகும் அளவிற்கு செய்துவிட்டார் ஜூலி என்று தான் கூறவேண்டும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் எவிக்ஷனான ஜீலிக்கு, மக்கள் மத்தியில் இருந்து எதிா்ப்பே கிளம்பியது. இதனால் வெளியிடங்களில் சுதந்திரமாக கூட ஜூலியால் செல்ல முடியவில்லை. இருந்தாலும் விருந்தினராக மறுபடியும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றாா் ஜூலி

juli

வி.ஜே ஆக வேண்டும் என்பது என் ஆசை என பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொிவித்திருந்தாா் ஜூலி. அந்த ஆசை இப்போது நிறைவேறப் போகிறது. கலைஞா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறா்ா ஜூலி.

ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியின் 6வது சீசன் தொடங்க உள்ளது. குழந்தைகளின் நடனத்திறமையைக் கண்டுபிடித்து ஊக்குவிக்கும் இந்த நிகழ்ச்சியைத்தான் ஜூலி தொகுத்து வழங்க உள்ளாா்.

நடன இயக்குநா் கலா மற்றும் கோகுல் ஆகியோா் இந்த நிகழ்ச்சியின் நடுவா்களாகப் பங்கேற்கின்றனா். ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மாறினார் ஜூலி.

juli

இந்நிகழ்ச்சியின் முதல் நாள் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது, வழக்கம் போல் தன் ‘லொட லொட’ வாயை வைத்துவிட்டு சும்மா இருக்காமல் ,குழந்தைகளிடம் சென்று தன் கதையை பேசியுள்ளார்.

உடனடியாக சுதாரித்த குழந்தைகள், ‘உங்கள எங்களுக்கு பிடிக்காது, நீங்கள் அதிகமா பொய் சொல்லுவிங்கனு எங்க அம்மா சொல்லி இருக்காங்க’ ‘ஓவியாவைத் தான் எங்களுக்கு பிடிக்கும் எனக் கூறி ஜூலியை பங்கம் செய்துள்ளது குழந்தைகள்.

juli

உடனே, மன வருத்தத்தில் அழுது செட்டை விட்டு வெளியேறியுள்ளார் ஜூலி. பின்னர், நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் ஜூலியை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை வைத்து உப்பு தின்றால் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என்பதை தற்போது ஜூலி சிறிது சிறிதாக உணர ஆரம்பித்துள்ளார் என சமூகவலை தளங்களில் விமர்சித்து வருகின்றனர் வலைதல வாசிகள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top