விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் கமல் இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டுக்குள் தங்க வைக்கப்பட்டு, இவர்களை 30 கேமராக்கள் கண்காணிக்கும்.

இந்த அனைவரும் ஒரே வீட்டில் இருக்கும் போது சர்ச்சைகள் ஏற்படும். சர்ச்சைகளை இந்த டிவி சூட் செய்து, அதனை ஒளிபரப்பி காசு பார்க்கும்.

போட்டியில் கலந்துகொண்டவர்கள் நான் ஏன் ஜெயிக்க வேண்டும்.எப்படி வெற்றி பெறுவேன் என்பது குறித்து மேடையில் பேசியாக வேண்டும். இதில் ஜல்லிக்கட்டு ராணி ஜுலி பேசும்போது நான் சாதாரண குடும்பத்துப் பெண். எனது தந்தை மிகவும் சிரமப்பட்டு எங்களைக் காப்பாற்றினார்.

சிறுவயது முதலே கல்விக்காக மிகவும் சிரமப்பட்டேன். தொண்டு நிறுவனங்கள் உதவியால்தான் படித்து வந்தேன். தற்போது நர்ஸ் வேலை செய்கிறேன். நான் உண்மையையே பேசுவேன் எனக்கு நடிக்கத் தெரியாது என்றார்.

இப்படி ஜுலி கதறி, கதறி அழுததற்கு, மற்ற போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கணேஷ் வெங்கட்ராம் சக்தி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.