juli

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜுலி. ஆனால் இதற்கு முன்பே இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் வீரத்தமிழச்சி என்ற அடைமொழியோடு தான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஆனால் இந்நிகழ்ச்சியில் இவர் செய்த சில விஷயங்கள் இவரை மற்றவர்கள் திட்டும்படி அமைந்தது. இன்றுவரை பலரும் அவரை திட்டிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

juli

தயவு செய்து உதவி செய்க என்று ஜூலியும், காயத்ரியும் மக்களிடம் கேட்டுள்ளனர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு ஜூலிக்கு நல்ல பெயர் இருந்தது.

ஜல்லிக்கட்டுக்காக போராடிய பொண்ணு என்று பாராட்டியவர்களே இன்று ஜூலியை போலி என்று திட்டுகிறார்கள்.இதை ஜூலி கண்டுகொள்வது இல்லை.

juli biggboss

இவர் தற்போது ஒரு நல்ல விஷயத்தை செய்துள்ளார். அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் ஒரு வயது குழந்தையின் நிலையை உணர்ந்து அந்த குழந்தையின் மருத்துவ செலவுக்கு உதவும்படி கேட்டு ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

ஒரு வயது குழந்தை ககனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு ரூ.20 லட்சம் தேவைப்படுகிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ககன் வீட்டாரால் இதை சமாளிக்க முடியவில்லை. தயாள குணம் உள்ளவர்கள் தயவு செய்து உதவுங்கள் என்று வீடியோ மூலம் கேட்டுள்ளார் ஜூலி.

ஜூலி உதவி கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ லிங்கை ட்வீட்டி குழந்தைக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வோம் என்று தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.ஜூலி உதவி கேட்டு போட்ட ட்வீட்டை பார்த்தவர்களில் சிலர் அவரை பாராட்டி உதவி செய்வதாக கூறியுள்ளனர்.

சிலர், ஜூலி நீ தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சம்பளத்தில் இருந்து கொடுக்கிறத விட வேண்டியது தானே? என்றும் கேட்டுள்ளனர்.

அதிகம் படித்தவை:  பிக்பாஸ் ஜூலி நடிக்கும் முதல் விளம்பரம்.! போஸ்டர் உள்ளே.! இயக்குநர் ஒப்பன் டாக்.!