பிக்பாஸ் வீட்டில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி, ஜூலி சினேகன், வையாபுரி கலக்கம். பிக்பாஸ் வீட்டில் ஓவியா, ஜூலி மற்றும் காயத்ரி சென்ற பிறகு நிகழ்ச்சி படுத்து விட்டது. இதனை தூக்கி நிறுத்த பிக்பாஸ் என்னென்னவோ முயற்சி செய்கிறது, யார் யாரையோ எல்லாம் அழைத்து வருகிறது. இதனால் எந்த பயனும் இல்லை. ரசிகர்கள் விரும்புவது ஓவியாதான். ஆனால் அவர் வர தயாராக இல்லை.

harathi-bigg-boss-arthi ganeshஇந்த நிலையில் பிக்பாசை விட்டு வெளியேறிய ஆர்த்தி, ஜூலி, பரணி, சக்தி, காயத்ரி ஆகியோர் நேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அவர்களில் 2 பேர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறினார். மேலும் அவர்களிடம் மீண்டும் யார் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல விரும்புகிறீர்கள் என்று கமல் கேட்டார். அதற்கு காயத்ரி முடியாது என்று மறுத்து விட்டார். பரணி இப்போது செல்லும் நிலையில் இல்லை என்று கூறி விட்டார்.

மற்றபடி ஆர்த்தியும், ஜூலியும் செல்ல ரெடி என்று கூறினார். சக்தியும் இரண்டு பேரை டிரிக்கர் செய்ய வேண்டும். அதற்காக வேண்டுமானால் செல்கிறேன் என்றார். எனவே இந்த 3 பேரில் இரண்டு பேர் மட்டுமே செல்ல வாய்ப்பு உள்ளது. இன்றைய ப்ரமோவில் பிக்பாஸ் வீட்டில் ஆர்த்தியின் குரல் ஒலிக்கிறது. எனவே அவர் செல்வது உறுதியாகி விட்டது. இன்னொருவர் ஜூலியா அல்லது சக்தியா என்பது தெரியவில்லை. அனேகமாக ஜூலி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

julie biggboss