fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் பெருத்த அவமானத்தில் ஜூலி, தொடர்ந்து போட்டுக் காட்டி கடுப்பேத்தும் கலைஞர் டீவி!

News | செய்திகள்

மீண்டும் பெருத்த அவமானத்தில் ஜூலி, தொடர்ந்து போட்டுக் காட்டி கடுப்பேத்தும் கலைஞர் டீவி!

அடுத்தடுத்து பல பிரச்சனைகளில் மாட்டி வருகிறார் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானதால் மற்ற நடிகர்ளுக்கு நோட்டீஸ் அனுப்பியதைப் போலவே ஜூலிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது கோர்ட்.

juli

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், அதையெல்லாம் பற்றி சிறிதும் கூட கவலைப்படாமல் அடுத்தடுத்து கிடைத்த பிரபலத்தை வைத்து சற்று அடுத்த கட்டத்திற்க்கான வாழ்க்கையை துவங்கியுள்ளார் ஜூலி.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஜூலிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் அல்லது சின்னத்திரையில் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பது லட்சியம் என்று கூறினார்.

இது கலைஞர் டிவி வாயிலாக நிறைவேறியதாக செய்திகள் வெளிவந்தன. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, கலைஞர் டீவியில் ஒளிபரப்பப்படும் ஓடி விளையாடு பாப்பா என்னும் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

juli

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளால் அவமானப்பட்ட ஜூலி தற்போது வான்ட்டடாக சென்று மீண்டும் அவமானப்பட்டுள்ளார்.

இதில் நடன இயக்குநர் கலா மற்றும் கோகுல் நடுவர்களாக உள்ளனர். இந்த நிலையில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் ராதை மனதில் பாட்டுக்கு அட்டகாசமாக டான்ஸ் ஆடி அசத்தினார்.

இதனை பார்த்த ஜூலியும் ஆர்வத்தில் அவருடன் போட்டி போட்டு நடனமாடினார். ஆனால் அவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். இதனை பார்த்து பார்வையாளர்கள் சிரிக்க தொடங்கி உள்ளனர்.

julie

அவமானப்பட்ட ஜூலி உடனடியாக ஒதுங்கிக்கொண்டார். இதனை பிடித்துக்கொண்ட கலைஞர் டீவி தற்போது அந்த வீடியோவை மீண்டும் மீண்டும் போட்டு ப்ரோமோட் செய்து வருகிறது.

இதனை டிவியும் ஒளிபரப்ப மீண்டும் நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கி உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top